தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சின்ன வேலைகள் நடைபெறுகிறது பெரிய வேலைகள் நடப்பதில்லை

33 minutes before
சின்ன வேலைகள் நடைபெறுகிறது பெரிய வேலைகள் நடப்பதில்லை

சின்ன வேலைகள் நடைபெறுகிறது பெரிய வேலைகள் நடப்பதில்லை

சின்னக்கம்பாளையம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகுடீஸ்வரிதா ராபுரம் தாலுகா சின்னக்கம்பாளையம் பேரூராட்சி 4ஆவது வார்டு உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் மகுடீஸ்வரி பணியாற்றி வருகிறார். மில்தொழிலாளியான இவர் வேலைக்கு சென்று சொந்த வாழ்க்கையை நடத்துவதுடன், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரான இவரதுகணவர் கோபாலகிருஷ்ணன் ஒத்துழைப்புடன் வார்டு மக்கள் பணியையும் நிறைவேற்றி வருகிறார்.சின்னக்கம்பாளையம் பேரூராட்சியில் மாதந்தோறும் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெறும் அதில் நான் தவறாமல் பங்கேற்பேன். சோமனூத்து, புது காலனி இரு பகுதிகளை கொண்ட 4ஆவது வார்டில் பதினோரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் கட்டமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அதேபோல் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வார்டில் 20 மின்விளக்குகள் தேவை என கேட்டிருந்தோம். ஆனால் ஐந்துமின்கம்பங்கள் வந்திருக்கிறது என்று நிர்வாகத்தில் சொல்கிறார்கள். அதுவும் அமைக்கப்படவில்லை.  குப்பை அகற்றுவது, கழிவுநீர் வடிகால் சுத்தப்படுத்துவது ஆகியபணிகள் மட்டும்சரியாக நடைபெறுவதில்லை. கூப்பிட்டால் வருவார்கள்.இல்லாவிட்டால் பத்து நாட்களுக்கு ஒரு முறை வேலை நடைபெறும்.புதுக்காலணையில் கழிவு நீர் வடிகால் உடைந்திருக்கிறது அதை சரி செய்தால்தான் கழிவுநீர் அகற்றம்நடைபெறும் அதற்காக தொடர்ந்து மூன்றாண்டுகளாக கோரிக்கை வைத்தாலும் பேரூராட்சியில் நிதி இல்லைஎன்று சொல்கிறார்கள்.

இந்த வார்டு மக்களை பொறுத்தவரை எங்கள் பணியை வரவேற்கிறார்கள். குறைசொல்லும் அளவுக்கு எங்கள் பணியில்லை.  ரோடு, வடிகால், தெருவிளக்கு பிரச்சனைகள் உள்ளன. நிதி இல்லை என்று சொல்வதால் அந்த வேலைகள் நடைபெறாமல் உள்ளது என்று மகுடீஸ்வரி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.