தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

24 Jan 2026, 3:38 pm
விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 4ஆவது சுற்றில் சின்னர்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் போட்டி யான ஆஸ்திரேலிய ஓபன் தொ டரின் 114ஆவது சீசனில், தற்போது ரவுண்ட்ஸ் சுற்று ஆட்டங்கள் நடை பெற்று வருகிறது. சனியன்று நடை பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரி சையில் இரண்டாவது இடத்தில் உள்ள  இத்தாலியின் ஜானிக் சின்னர், தரவரி சையில் இல்லாத அமெரிக்காவின் எலியட்டை 4-6, 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள்: செல்டான் (அமெரிக்கா), முஸ் ஸெட்டி (இத்தாலி). எனினும் தரவரி சையில் 15ஆவது இடத்தில் ரஷ்யா வின் காச்சானோவ், தரவரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள இத்தா லியின் லூசியானாவிடம் வீழ்ந்து, அதிர்ச்சி தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறினார். அனிஸிமோவா முன்னேற்றம் சனியன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அனிஸிமோவா, தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் பெய்ட்டா னை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள் : எலிசி மெர்டன்ஸ் (பெல்ஜியம்), பெகுலா (அமெரிக்கா), கீஸ் (அமெ ரிக்கா).

கொளுத்தும் வெயில்; வீரர்-வீராங்கனைகள் திணறல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக மெல்போர்ன் நகரம் உள்ளிட்ட ஆஸ்திரேலிய மாகாணங்களில் வெயில் கடுமையாக கொளுத்தி வரு கிறது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடி வரும் வீரர் - வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மெல்போர்னில் வெப்பநிலை சுமார் 36 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் வரை உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் வெப்ப அளவீடு முறையில் புதிய விதி அறிவிக் கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கமான வெப்பத்தை விட 5 டிகிரி செல்ஸியஸ் அளவில் கூடுதலாக வெப்பம் பதிவானால், போட்டியை நிறுத்த விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. சனியன்று 36 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு வெப்பம் நிலவியதால், ஆஸ்திரேலிய நாட்டின் நேரத்தின் படி, மதிய நேரம் வெட்ட வெளி மைதானங்களில் (Outside Courts) நடந்து வந்த அனைத்துப் போட்டிகளும், பயிற்சி களும் நிறுத்தப்பட்டு, மாலை 5.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. முக்கிய மைதானமான ராட் லேவர் அரினா போன்ற மேற்கூரை கொண்ட மைதானங்களில் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டு, மேற்கூரைகள் மூடப்பட்ட பின் ஆட்டங்கள் மீண்டும் தொடங்கின. நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர், அமெரிக்க வீரர் எலியட் ஸ்பிஸிரிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்த போது வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டார். தசைப் பிடிப்பு மற்றும் உடல்நலக் குறைவால் அவர் தவித்தபோது, வெப்ப விதிமுறையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு மேற்கூரை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஜிஎப்ஐ தேசிய மகளிர் கபடி : தமிழ்நாடு அணிக்கு வெண்கலம்

இந்தியப் பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பின் (எஸ்ஜிஎப்ஐ) மகளிர் 69ஆவது தேசிய மகளிர் (யு-19) கபடி போட்டிகள் இமாச்சலப் பிரதேச மாநிலம் நலஹரவில் கடந்த வாரம் நடை பெற்றது. இந்த தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி சிஐஎஸ்சிஇ (CISCE), மகாராஷ்டிரா அணிகளை வென்று குழுவில் முதல் இடம் பிடித்தது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கேர ளாவை வீழ்த்திய தமிழ்நாடு, காலிறு தியில் சத்தீஸ்கர் அணியை வென்றது. தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதியில் ஹரியானா அணியை சந்தித்து, நடு வர்களின் பாரபட்ச முடிவு மற்றும் மோச மான தீர்ப்புக்கு இரையாகி தமிழ்நாடு அணியின் வெற்றி வாய்ப்பு பறிக்கப் பட்டது. 3ஆவது இடத்திற்கான போட்டி யில் உத்தரப்பிரதேசம் அணியை வென்ற தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது. போட்டியை நடத்திய இமாச்சலப் பிரதேசம்  தங்கப் பதக்கத்தையும், ஹரியானா அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.