சீனாவிலிருந்து சென்னைக்கு சரக்குக்கப்பல் போக்குவரத்து தொடக்கம்
4 Oct 2026, 10:04 pm
<p><strong>சீனாவிலிருந்து சென்னைக்கு சரக்குக்கப்பல் போக்குவரத்து தொடக்கம்</strong></p><p>சென்னை, அக்.4 -சீனாவிலிருந்து வியட்நாம் வழியாக சென்னை துறைமுகத்துக்கு வந்த “எம்.பி.ஹயான் பீட்டா” என்ற முதல் சரக்குப் பெட்டகக் கப்பலை சென்னை துறைமுகத் தலைவர் சச்சின் எஸ்.குர்வே சனிக்கிழமை வரவேற்றார்.‘ஹையன் லைன்ஸ்’ என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் சார்பில் சீனாவின் நான்ஷா,வியட்நாமின் ஹைபோங், மலேசியாவின் கிளாங் மேற்கு ஆகிய துறைமுகங்கள் வழியாக முதல் பயணத்தின் மூலம் சென்னை துறைமுகத்தை இந்தக் கப்பல் சனிக்கிழமைவந்தடைந்தது.</p><p>இதுகுறித்து துறைமுகத் தலைவர் சச்சின் எஸ்.குர்வே கூறுகையில், “தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல், வாகன உதிரிபாகங்கள், மின்னணு, பொறியியல் பொருட்கள், இயந்திரங்கள், ரசாயனங்கள், ஜவுளி சார்ந்த தொழில்கள் பெருவாரியாக உள்ளன. இதனால் வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நடைபெறும் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில்சென்னை துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா - வியட்நாம் வர்த்தகஉறவு தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், இந்த புதிய கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் பெறுகிறது” என்றார்.</p>
