தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிராமங்களின் நிதிப்பகிர்வு: உலகிற்கே வழிகாட்டும் மக்கள் சீனம்! - முனைவர் அ.உமர்பாரூக்

7 Jul 2026, 10:34 pm
கிராமங்களின் நிதிப்பகிர்வு: உலகிற்கே வழிகாட்டும் மக்கள் சீனம்! - முனைவர் அ.உமர்பாரூக்

கிராமங்களின் நிதிப்பகிர்வு: உலகிற்கே வழிகாட்டும் மக்கள் சீனம்! - முனைவர் அ.உமர்பாரூக்

தெற்கு சீனா வின் குவாங் டாங் மாகாணத்திலுள்ள லீடே கிராமத்தில் பிறந்த ஒவ்வொரு வருக்கும் சென்றஆண்டு 15 முதல் 18 லட்சம் ரூபாய் நிதிப்பகிர்வாகக் கிடைத்துள்ளது. கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் இடிங்ஷன் கிராம மக்கள் ஒவ்வொரு வருக்கும் 6 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஹுவாக்சி கிராமவாசிகள் அனைவருக்கும் ஒரு பங்களாவும், ஒரு காரும் நிதிப்பகிர் வாக வழங்கப்பட்டு உலகையே வியக்க வைத்தனர்.இவையெல்லாம் அரசாங்கம் வழங்கிய இலவசங்கள் அல்ல; மாறாக, “அனைவருக்கும் செழுமை” என்ற சீனாவின் மார்க்சிய நிதிப்பகி ர்வுக் கொள்கையின் நேரடி விளைவு ஆகும்.

கம்யூனிசக் கூட்டுறவு மாதிரியும் நில உரிமையும்

1949 சீனப் புரட்சிக்குப் பிறகு மாசேதுங் தலைமையிலான கம்யூ னிச அரசு பெருமுதலாளிகளின் நிலங்களைக் கையகப்படுத்தி, நிலமற்ற 30 கோடி மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தது. பின்னர் அவை கூட்டுப் பண்ணைகளாக மாற்றப் பட்டு, நாட்டின் மொத்த நிலமும் அர சுடைமையாக்கப்பட்டது.

நகரங்களின் தீவிர வளர்ச்சி கிராமங்களில் பிரதிபலிக்காததை உணர்ந்த சீன அரசு, 1980-களி லிருந்து 2016 வரை கிராமங் களுக்கான புதிய திட்டங்களை விரிவு படுத்தியது. சீனாவில் நிலங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம். தனிநபர்கள் வீடு கட்டவோ, விவசா யம் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்கவோ நிலத்தை அரசிட மிருந்து குத்தகைக்கு மட்டுமே பெற முடியும்.

கிராமங்களில் நம் நாட்டுப் பஞ்சா யத்துகளைப் போலக் ‘கூட்டுற வுச் சங்கங்கள்’ இயங்குகின்றன. கிரா மத்தில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் இச்சங்கத்தின் உறுப்பினர் களாக்கப்படுகிறார்கள். கிராம நிலங்கள் அனைத்தும் இக்கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச்சொத்தாகும். நிலத்திற்கான கட்டணத்தையும் வரியையும் கூட்டுறவுச் சங்கமே வசூ லிக்கிறது. ஆண்டு முழுவதும் வரும் வருமானத்தைக் கொண்டு கிராம வளர்ச்சித் திட்டங்களை முடித்த பின், எஞ்சியுள்ள உபரி லாபம் முழு மையாகக் கிராம மக்களுக்கே சமமாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த உத்தியின் மூலமே லீடே, இடிங்ஷன் மற்றும் ஹூவாக்சி கிராமங்கள் இமா லய நிதிப்பகிர்வைச் சாத்தியமாக்கின.

பொருளாதாரத் தன்னிறைவும் ‘தீபாவ்’ திட்டமும்

சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 35% பேர் சுமார் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கின்றனர். இதில் 1.5 முதல் 2 லட்சம் கிராமங்கள் மிக அதிக நிதிப்பகிர்வைப் பெறு கின்றன. சுமார் 3 முதல் 4 லட்சம் கிராமங்களில் போதிய உபரி வருமானம் இல்லாததால் நிதிப்பகிர்வு இல்லை. எனினும், அங்குள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான கிரா மங்கள் பொருளாதாரத் தன்னிறை வை எட்டிவிட்டன. மிகவும் பின்தங்கிய கிராமத்தில்கூட ஒரு தனிமனிதரின் சராசரி வருமானம் மாதம் 10,000 ரூபாயாகும். உலகிலேயே சொந்த வீடு அதிகமுள்ள நாடு சீனாதான்; இங்கு 98% மக்களுக்குச் சொந்த வீடு உள்ளது. நிதிப்பகிர்வு கிடைக்காத, குடும்ப வருமானம் போதாத எளிய மக்க ளுக்குச் சீன அரசு ‘வாழ்வாதார குறைந்தபட்ச உத்தரவாதத் தொகை’ (தீபாவ் - Dibao) திட்டத்தின் கீழ் மாதம் 7,000 முதல் 10,000 ரூபாய் வரை வழங்குகிறது. மாற்றுத்திறனாளி களுக்குப் பராமரிப்பு நிதியாகக் கூடுத லாக 8,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

2026-ன் புதிய சமூக உதவிச் சட்டம்

சமீபத்தில், ஏப்ரல் 2026-ல் சீனா ‘சமூக உதவிச் சட்டம்’ (Social Assistance Law) என்ற புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம், ஏழைகளுக்கு அரசு தரும் நிதி என்பது சலுகையோ உதவியோ அல்ல, அது தனிமனிதரின் ‘அடிப்படை உரிமை’ எனச் சட்டம் பிரகடனப்படுத்துகிறது. இச்சட்டம் கிராமப்புற-நகர்ப்புற பொருளாதார இடைவெளியைக் குறைக்க வழிவகை செய்கிறது. கிராம மக்கள் மட்டுமல்லாது நகரவாசிகளுக்கும் ஓய்வூதியம், வேலையில்லாதவர்களுக்கான வாழ்வாதாரத் தொகை, நிறு வனங்களின் லாபப்பகிர்வு எனப் பொரு ளாதார நெருக்கடிகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்கி, மக்கள் சீனம் இன்று உலகிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.