தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

5 Oct 2026, 9:12 pm
விளையாட்டு

விளையாட்டு

சீன ஓபன் டென்னிஸ்4ஆவது சுற்றில் ஸ்வியாடெக்

2026ஆம் ஆண்டிற்கான சீன ஓபன் டென்னிஸ் தொடர் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து இல்லையென்றாலும், அதிக பரிசுத்தொகை மற்றும் முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளதால், சீன ஓபன் குறுகிய காலத்தில் (35ஆண்டுகள்) தலைசிறந்த டென்னிஸ்தொடர்களில் ஒன்றாக உருவெடுத்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், திங்களன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 3ஆவதுசுற்று ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசை யில் 30ஆவது இடத்தில் உள்ள செக்குடியரசின் வெக்கிச்சை எதிர்கொண் டார். தொடக்கத்தில் வெக்கிச் ஆதிக்கம் செலுத்தினாலும், 2ஆவது செட்முதல் சுதாரித்து விளையாடிய ஸ்வியாடெக் 4-6, 7-6 (7-0), 6-2 என்றசெட் கணக்கில் அபார வெற்றி பெற்று,4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள்:சுவிட்டோலினா (உக்ரைன்), மெர்டன்ஸ் (பெல்ஜியம்), ஜோவிக் (அமெரிக்கா). (எனினும் பென்கிச் (சுவிட்சர்லாந்து),பவுச்கோவா (செக் குடியரசு) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் தரவரிசை இல்லாத வீராங்கனைகளிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினர்).இறுதிப்போட்டியில் டி மினார்திங்களன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் டி மினார், போலந்தின் ஹுபர்ட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். 6-4, 3-2என்ற செட் கணக்கில் டி மினார் முன்னிலையில் இருந்த போது, ஹுபர்ட் காயம் காரணமாக வெளியேறினார். இதன்மூலம் டி மினார் இறுதிப்போட்டி க்குமுன்னேறினார்.

பவுன்சர்- வைடு- 5 ரன்கள் பேட்டில் படாமல் சிக்சருக்குச் சென்ற பந்து!

கனடா நாட்டில் ‘சூப்பர் 60’ கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டொராண்டோ சிக்சர்ஸ் - மிசிசாகா மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், கிரிக்கெட்ரசிகர்களையும் வர்ணனையாளர் களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.வான்கூவரில் உள்ள பிசி பிளேஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டொராண்டோ சிக்சர்ஸ் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மிசிசாகா மாஸ்டர்ஸ் அணியின் அலெக்ஸ் லீஸ் 11 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியபோதிலும், அந்த அணியால் இலக்கை எட்ட முடியாமல் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் டொராண்டோ சிக்சர்ஸ் அணிஇறுதிப்போட்டிக்கு முன்னேறியது.சர்ச்சையை ஏற்படுத்திய பந்துவீச்சுடொராண்டோ அணியின் பேட்டிங்கின் போது, மிசிசாகா அணியின் வேகப்பந்து வீச்சாளர் அலி கான் வீசிய ஒரு பந்து போட்டியின் முக்கியவிவாதப் பொருளாக மாறியது. 9ஆவது ஓவரை வீசிய அலி கான், ஒரு பவுன்சர் பந்தை வீசினார். அந்தப் பந்து பேட்டர் பொல்லார்ட் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகிய இருவரின் தலைக்கும்மேலே உயர்ந்து சென்று, நேரடியாக எல்லைக் கோட்டிற்கு வெளியே மைதானத்தின் பார்வையாளர் பகுதியில்போய் விழுந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வர்ணனையாளர்கள், தொடக்கத்தில் அதை ‘லைவ் வைடு சிக்ஸர்’ என்று குறிப்பிட்டனர். ஏனெனில் கிரிக்கெட் வரலாற்றில் இத்தகைய ஒரு சம்பவம் அரிதாகவே நடந்துள்ளது. இருப்பினும், பந்து தரை தொடாமல் நேரடியாக எல்லைக்கோட்டைத் தாண்டியபோதிலும், நடுவர் அதை

‘வைடு’ என அறிவித்து டொராண்டோ அணிக்கு 5 ரன்கள் மட்டுமே வழங்கினார்.

எம்சிசி விதிகள் சொல்வது என்ன?எம்சிசி (MCC) விதி 19.7-ன் படி, ஒரு பேட்டர் பேட்டால் அடித்தால் மட்டுமேஅவருக்கு 6 ரன்கள் கணக்கில் வழங்கப்படும். விதி 19.7.2-ன் படி, பேட்டில்படாமல் எல்லைக்கோட்டைத் தாண்டும் பந்துகளுக்கு (தரை தொட்டுச் சென்றாலும் அல்லது நேரடியாகச் சென்றாலும்) 4 ரன்கள் மட்டுமே பவுண்டரியாக வழங்கப்படும். எனவே, பேட்டர் தொடாத வைடு பந்து நேரடியாக எல்லைக்கோட்டைத் தாண்டினாலும் அது 4 ரன்கள் மட்டுமே.வைடு பந்திற்கான 1 ரன் அபராதத்து டன் சேர்த்து (விதி 22.6) மொத்தம் 5 ரன்கள் வழங்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.