விளையாட்டு
9 Oct 2026, 8:45 pm

விளையாட்டு

சீன வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த ஸ்விட்டோலினா

2026-ஆம் ஆண்டிற்கான சீன ஓபன் டென்னிஸ் தொடர் முன்னெப்போதுமில்லாத வகையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்தத் தொடரில் வெள்ளியன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ள முன்னணி வீராங்கனையான உக்ரைனின் ஸ்விட்டோலினா, தரவரிசையில் இல்லாத சீன வீராங்கனை ஜெங்கை எதிர்கொண்டார். ஸ்விட்டோலினா அதிரடிக்குப் பெயர் பெற்றவர். சர்வீஸ்களில் மிரட்டக்கூடியவர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக அனுபவம் கொண்டவர். ஆனாலும் இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் சீன வீராங்கனை ஜெங், தனது அதிரடி ஆட்டத்தால் ஸ்விட்டோலினாவைத் தொடக்க கேம் முதலே திணற வைத்தார். இதனால் ஒரு செட்

கூட ஸ்விட்டோலினாவால் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அபார வெற்றி

பெற்று சீன வீராங்கனை ஜெங் அரையிறுதிக்கு முன்னேறினார். பதுங்கி பாயும் திறன் கொண்ட சீன வீராங்கனை ஜெங் 2024-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் திடீரென இறுதிக்கு முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜெண்டினா மீது பெனின் நாட்டு மேலாளர் குற்றச்சாட்டு

அர்ஜெண்டினா அணிக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் பங்கேற்றது. பியுனஸ் அயர்ஸில் (அர்ஜெண்டினா) உள்ள எஸ்டாடியோ மோனுமென்டல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-0 என்றகோல் கணக்கில் அர்ஜெண்டினா அபார வெற்றிபெற் றது. இந்தப் போட்டியோடு அர்ஜெண்டினா கேப்டனும், கால்பந்து ஜாம்பவானுமானலியோனல் மெஸ்ஸி சர்வதேசக் கால்பந்து போட்டிகளிலிருந்து கண்ணீரோடு விடைபெற்றார்.

மெஸ்ஸி விடைபெற்ற தால் அர்ஜெண்டினா - பெனின் அணிகள் மோதிய ஆட்டம் வரலாற்றுச் சிறப்பு

மிக்க போட்டியாக மாறியுள்ளது. எனினும், பெனின் மேலாளர் கெர்னோட் ரோஹரின் குற்றச்சாட்டால் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. போட்டி முடிவடைந்த பின்பு கெர்னோட் ரோஹர் கூறுகையில், “கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாகப் பெனின் வீரர்கள் அர்ஜெண்டினா நட்சத்திரங்களு டன் சீருடைகளை மாற்றிக்கொள்ளவோ அல்லது புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவோ அனுமதிக்கப் படவில்லை. அர்ஜெண்டி னா வீரர்களின் நடைபாதைக்குள் பெனின் வீரர்கள் நுழைவதைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினார்கள். அர்ஜெண்டினா வீரர்களுடன் மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் எங்கள்வீரர்கள் தங்களது சீருடை களுடன் வந்திருந்தனர்” எனஅவர் குற்றம்சாட்டியுள்ளார்.சர்வதேச கால்பந்துப் போட்டிகள் முடிந்ததும் சீருடைகளை மாற்றிக்கொள் வது, புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது ஒரு மரபாகும். ஆனால், கால்பந்து உலகில் வளர்ந்து வரும் நாடான பெனின் அணியை அர்ஜெண்டினா இவ்வாறு நடத்தியுள்ளது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

முக்கிய சர்வதேச டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹுயூபர்ட் ஹர்காக்ஸ் மோதினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஹுயூபர்ட் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார்.