தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்காவைவிட சீனாவுக்கு அதிக ஆதரவு: உலகளாவிய கருத்துக்கணிப்பு!

16 Jul 2026, 12:19 pm
அமெரிக்காவைவிட சீனாவுக்கு அதிக ஆதரவு: உலகளாவிய கருத்துக்கணிப்பு!

உலக மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்ற நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகளில், அமெரிக்காவை விட சீனாவை மக்கள் அதிகம் விரும்புவதாக பியூ ஆய்வு மையம் (Pew Research Center) வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

2026 பிப்ரவரி 8 முதல் மே 13 வரை, 35 நாடுகள் மற்றும் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் மொத்தம் 42,151 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் இடம்பெற்ற 36 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 25 இடங்களில் சீனாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும், இந்தியா, ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், போலந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய 6 நாடுகளில் மட்டுமே அமெரிக்காவுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், அமெரிக்காவின் மீது உலக நாடுகளின் நம்பிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.

அமெரிக்காவின் கூட்டு நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் கூட, டிரம்பை விட சீன அதிபர் ஷி ஜின்பிங் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மேற்காசியாவில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள், கூட்டாளி நாடுகளுடன் ஏற்பட்ட சுங்கவரி மோதல்கள், கிரீன்லாந்து தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட கருத்துகள் உள்ளிட்டவை அமெரிக்காவின் மதிப்பை பாதித்ததாக ஆய்வு குறிப்பிடுகிறது.

அதே நேரத்தில், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவைப் பற்றிய உலக நாடுகளின் பார்வை மீண்டும் மேம்பட்டுள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த நடுத்தர வருமான நாடுகளில், அமெரிக்காவைவிட சீனா உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அதிக பங்களிப்பு அளிக்கும் நாடு என்ற கருத்தும் அதிகரித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.