சீனாவில் பயங்கர நிலச்சரிவு: மீட்பு பணி மேற்கொள்வதில் சிரமம்
17 Jul 2026, 4:57 pm

சீனாவின் தென்மேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால், அங்கு வசித்து வந்த ஆயிரணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சீனாவின் பெங்சுய் மாகாணத்தில் உள்ள சோங்கிங் நகரத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவால் 10க்கும் அதிகமான அடுக்குமாடி கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

இதனைத்தொடர்ந்து, அங்கு மீட்புப் படையினர் களமிறங்கி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளனர்.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இடிபாடுகளுக்குள் இருந்து 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஏராளமானோர் இடுபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், வூஜியாங் ஆற்றின் அருகிலுள்ள மலைப்பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சமநிலை அற்ற மலைப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதால் அங்கு மீட்புப் பணிகள் மேற்கொள்வது மேலும் கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.