தீக்கதிர் உலக செய்திகள்
16 Jul 2026, 9:30 pm

அமைதி ஒப்பந்தத்தை குலைக்க இஸ்ரேலுக்குள் சதி வேலைகள்

இஸ்ரேல் தரப்பில் ஈரானுடனான ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் வேலைகள் நடப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்ட ஒப்பந் jத்தை எதிர்ப்பதற்காக, இஸ்ரேல் அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் முயற்சித்ததாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் அரசாங்கத்திற்குள் இருக்கும் சில நபர்கள், தொடர்ந்து போர் நடக்க வேண்டும் என விரும்புவதால், எங்களை அந்த ஒப்பந்தத்தின் கொள்கையிலிருந்து திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்களை தாக்க ஜெலென்ஸ்கி உத்தரவு

வெளிநாடுகளில் நடைபெறும் உக்ரைனின் இரகசிய நடவடிக்கைகளின் போது பொதுமக்களைக் கொல்லத் தயங்க வேண்டாம் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உத்தரவிட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது . உக்ரைன் உளவுத்துறை அமைப்பான செயல் கர்னல் விடாலி ஜிகோவிச் அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறித்து வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கிரீமியாவில் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்தில் வெப்ப அலை: 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

நெதர்லாந்தில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலை காரணமாக 900-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 22 முதல் ஜூலை 5 வரையிலான காலகட்டத்தில், எதிர்பார்க்கப்பட்டதை விட அந்நாட்டில் கூடுதலாக 911 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருந்த தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மட்டும் 576 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம்.

ஜெர்மன் தேர்தல் : அமெரிக்கா தலையிடக்கூடாது

ஜெர்மன் தேர்தல்களில் அமெரிக்கா தலையிடுவதை நான் விரும்பவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் உள்ள அரசியல் மற்றும் சிவில் குழுக்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு திட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்நாட்டில் செயல்படும் தீவிர வலதுசாரி கட்சியான ‘ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ (AfD) போன்ற குழுக்களுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும் அபாயம் உள்ளது. அதனால் “ஜெர்மனி எப்போதும் அமெரிக்கத் தேர்தல்களில் தலையிடுவதில்லை. அதேபோல், அமெரிக்க அரசாங்கமோ அல்லது அதன் சார்பு நிறுவனங்களோ ஜெர்மன் தேர்தல்களில் தலையிடுவதை நான் விரும்பவில்லை,” என்று மெர்ஸ் கூறியுள்ளார்.

நைஜீரியாவில் 4 மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நைஜீரியாவில் மழைக்காலம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, 14 மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் மார்ச் மாதம் தொடங்கும் மழைக்காலம் சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கும். குறிப்பாக மே மாதத்திற்குப் பிறகு மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும். அந்நாட்டில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். எனினும் காலநிலை மாற்றம் காரணமாகப் பெய்யும் தீவிரமான மற்றும் கணிக்க முடியாத மழைப்பொழிவு காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்படாமல் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை விட சீனாவுக்கு பெருகும் செல்வாக்கு உலகளவில் ஜி ஜின் பிங் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிப்பு

வாஷிங்டன்,ஜூலை 16- அமெரிக்காவை விட சீனாவிற்கு உலக அளவில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என பியூ ஆய்வு நிறுவனம் தெரி வித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கிய போது, அமெரிக்கா மீதான உலகளாவிய கருத்துகள் மோசம டைந்தன. இருப்பினும், பெரும்பாலான மக்கள் சீனாவை விட அமெரிக்காவைப் பற்றியே அதிக நேர்மறையான கருத்துக் களைக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு நிலைமை மாறியுள்ளது. சீனா மிக மோசமான நாடு என அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களும் கடந்த பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வந்தன. இதன் மூலம் கம்யூனிஸ்ட்கள் மீதான அவதூறுகளையும் கம்யூனிஸ்ட் ஆட்சியை பற்றிய பொய் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் 36 நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் கடந்த காலங்களில் சீனாவை மோசமான நாடாகக் கருதிய பல நாடுகள், இப்போது சீனாவை அதிகளவில் நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றன என புதிய ஆய்வில் வெளியாகியுள்ளது. அதேபோல அமெரிக்கா மீதான நேர்மறையான கருத்து கடந்த ஆண்டை விடக் குறைந்துள்ளது. குறிப்பாக வலதுசாரிகள் மற்றும் போர் ஆதரவாளர்களால் ஆட்சி நடத்தப்படும் இந்தியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் சீனாவை விட அமெரிக்கா மீதே நேர்மறை யான கண்ணோட்டம் முன்னிலையில் உள்ளது. சர்வதேச அளவில் நடக்கும் பிரச்சனைகளில் தலைவர்கள் சரியான முடிவுகளை எடுப்பது தொடர்பான நம்பிக்கை குறித்த தரவுகளும் இதே போக்கையே காட்டியுள்ளன. டிரம்ப் ஜனாதிபதி யாக பொறுப்பேற்ற முதல் இரண்டு ஆண்டுகளில், அவர் மீதான தரமதிப்பீடு குறைந்துள்ளது. தற்போது, டிரம்ப்பை விட ஜி ஜின்பிங் நல்ல முடிவை எடுப்பார் என அவர் மீது அதிக நம்பிக்கை வைப்பதாக பல நாடுகளில் மக்கள் தெரி வித்துள்ளனர். குறிப்பாக சீனாவிற்கு எதிரான பிரச்சாரத்தில் அமெரிக்கா வுடன் ரகசியமாக கைகோர்த்து செயல்பட்ட ஐரோப்பிய நாடு களில் தற்போது டிரம்ப்பை விட ஜி ஜின்பிங்கிற்கே அதிக ஆதரவு காணப்படுகிறது. ஆசியப் பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியா மற்றும் ஜப்பானில் டிரம்ப் அதிக ஆதரவைப் பெற்றுள்ளார். சீனா தனி நபர் சுதந்திரத்தை அனுமதிப்பதில்லை என வும் அந்நாட்டில் அடக்குமுறை நிலவுகிறது எனவும் பல ஆண்டு களாக அமெரிக்கா பிரச்சாரம் செய்துள்ளது. குறிப்பாக ஹாலிவுட் திரைப்படங்களில் அமெரிக்காவில் மட்டுமே சுதந்திரம் இருப்பது போலவும் அவர்கள் தான் உலக சுதந்திரத்தை பாதுகாப்பதாகவும் பொய் பிரச்சாரம் செய்து வந்தனர். தற்போது கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் தனிநபர் சுதந்திரம் மதிக்கப்படுவதாகக் கூறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. நடுத்தர வருமானம் கொண்ட 17 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை என்பது மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதாகவே உள்ளது என 75 சதவிகித மக்கள் கருதுகின்றனர். அதுவே சீனா பிற நாடு களின் விவகாரங்களில் தலையிடுவதாக கருதும் மக்களின் எண்ணிக்கை 45 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்காவை விட சீனாவையே ஒரு நம்பகமான கூட்டாளியாக கருதுகின்றனர். அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் இடையிலான வளர்ச்சிக் கான போட்டி, அந்நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் பிற நாடுகளுடனான அணுகுமுறைகள் உலக அரசியலில் பெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. பல நாடுகள் சீனாவுடன் நெருக்கமான உறவை விரும்பத் தொடங்கியிருப்பதும், அமெ ரிக்கா மீதான பார்வை சரிந்திருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.