முந்தய பக்கம்

சீனாவில் பயங்கர வெடிவிபத்து: 21 பேர் உயிரிழப்பு

5 May 2026, 5:48 pm
சீனாவில் பயங்கர வெடிவிபத்து: 21 பேர் உயிரிழப்பு
<p>சீனாவில் பட்டாசு ஆலையில் நேற்று மாலை நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும் 61 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>ஹூனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரின் லியுயாங் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நேற்று மாலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>வெடி விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். 61 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் வெடிமருந்து கிடங்குகள் இருந்ததால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.</p><p>மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக தொழிற்சாலையின் நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram