நிலக்கரிச் சுரங்க வெடி விபத்து சீனாவில் 90 பேர் பலி!
23 May 2026, 9:31 pm

நிலக்கரிச் சுரங்க வெடி விபத்து சீனாவில் 90 பேர் பலி!

பெய்ஜிங், மே 23- சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட எரி வாயு வெடி விபத்தில் சுமார் 90 பேர் பலியாகியுள்ளனர்.

வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள சின்யுவான் (Qiny uan) மாவட்டத்தில் அமைந் துள்ள லியுஷென்யு (Liush enyu) நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வ தற்காக மருத்துவப் பணி யாளர்கள் உட்பட 755 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர். மீட்புப் பணிகள் தொட ர்ந்து நடைபெற்று வரு கின்றன.

123 பேர் காயமடைந் துள்ள நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 33 பேர் சிகி ச்சை முடிந்து வீடு திரும்பி யுள்ளனர். இவர்களில் இரு வரது நிலைமை கவலைக் கிடமாகவும், இருவரது நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மீட்புப்பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தி யுள்ளார். குறிப்பாக விபத் துக்கான காரணத்தைக் கண்டறிய முறையான விசா ரணை நடத்தி, சம்பந்தப்பட்ட வர்கள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.