தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மிளகாயில் இலைச் சுருட்டு நோயை கட்டுப்படுத்த பயிற்சி

13 Aug 2026, 10:36 pm
மிளகாயில் இலைச் சுருட்டு நோயை கட்டுப்படுத்த  பயிற்சி

மிளகாயில் இலைச் சுருட்டு நோயை கட்டுப்படுத்த பயிற்சி

தென்காசி, ஆக. 13-தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை பகுதியில் நடைபெற்ற கிராமப்புற தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், மிளகாய் பயிரில் காணப்படும் இலைச் சுருட்டு நோயின் அறிகுறிகள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

கலசலிங்கம் பல்கலைக்கழக தோட்டக்கலைத் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் விவசாயிகளுக்கு மிளகாயில் இலைச் சுருட்டு நோயின் அறிகுறிகள், நோயைப் பரப்பும் வெள்ளை ஈயின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தங்கம் தலைமை வகித்தார். கலசலிங்கம் பல்கலைக்கழக தோட்டக்கலைத் துறை துணைப் பேராசிரியர் முனைவர் சீ.விஜயகுமார் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.செல்வராணி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாணவிகள் இப்பயிற்சியை நடத்தினர்.

மிளகாய் பயிரில் இலைகள் மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் சுருண்டு காணப்படுதல், இலைகள் சிறுத்தல், இலைகள் நெருக்கமாக வளர்தல், பூக்கள் உதிர்தல், காய் பிடிப்பு குறைதல் மற்றும் செடியின் வளர்ச்சி குன்றுதல் போன்றவை இலைச் சுருட்டு நோயின் முக்கிய அறிகுறிகள் என விளக்கப்பட்டது.

நோயைப் பரப்பும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த வயல்களில் மஞ்சள் ஒட்டும் பொறிகளை அமைத்தல், வேப்ப எண்ணெய் தெளித்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் நோய் பாதிப்பைக் குறைத்து மிளகாய் பயிரில் மகசூலை அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.