தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிலியில் கல்வித்துறைக்கு நிதி வெட்டு: ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெரும் போராட்டம்!

7 Oct 2026, 9:37 pm
சிலியில் கல்வித்துறைக்கு நிதி வெட்டு: ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெரும் போராட்டம்!

சிலியில் கல்வித்துறைக்கு நிதி வெட்டு: ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெரும் போராட்டம்!

சான்டியாகோ, அக். 7சிலி அரசு கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்குஎதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அமைதியான முறையில் மாணவர்கள் நடத்திய பேரணியில் புகுந்த காவல்துறை கொடூரத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

சிலி ஜனாதிபதி ஜோஸ் அந்தோனியோ காஸ்ட் தீவிர பழமைவாதக் கட்சியின் தலைவராவார். இவர் கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ‘சிக்கனம்’ என்ற பெயரில் மக்கள் நலத்திட்டங்களுக்கான செலவுகளை அவர் வெட்டி வருகிறார். இந்தப் பின்னணியில், 2027ஆம் ஆண்டுக்கான புதிய நிதிநிலை அறிக்கையை அவர்அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் கல்வித்துறைக்கான நிதி பெருமளவில் குறைக்கக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மாணவர்களையும் நாட்டின் எதிர்காலத்தையும் கைவிடும் இத்தகைய போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கல்வித்துறையைப் பாதுகாக்கவும் ‘சிலி மாணவர் கூட்டமைப்பு’ (Confech) தலைநகர் சாண்டியாகோவில் கடந்த அக்டோபர் 2 அன்று பிரம்மாண்டமான பேரணிக்குஅழைப்பு விடுத்தது. முன்அனுமதி பெற்று நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் இளைஞர்களும் பங்கேற்றனர்.

“சிலியை மாற்றியமைப்போம்; கல்விக்காக ஒரு பைசாகூடக் குறைக்கக் கூடாது; கல்வித்துறையைப் பாதுகாக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோக்கங்களை முழங்கியபடி பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது, ‘கராபினெரோஸ்’ (Carabineros) எனப்படும் ராணுவமயமாக்கப்பட்ட சிலி காவல்படையினர் திடீரெனக் கொடூரமான தாக்குதலைத் தொடுத்தனர்.தண்ணீர் பீரங்கி வாகனங்கள் மூலம் இரசாயனம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் பேரணியை வன்முறை மூலமாகக் கலைக்க முயன்றனர்.

நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்புஇந்தக் கொடூர அடக்குமுறையைச் சிலி தொழிலாளர் முன்னணி, பெண் உரிமை ஒருங்கிணைப்புக் குழு, சிலி ஆசிரியர் சங்கம் உள்ளிட்டபல்வேறு அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. காவல்துறையின் இந்த வன்முறை நடவடிக்கையால் பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், 5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

அரசின் இந்த அடக்குமுறைக்கு அஞ்சாமல்மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் தொடர்ந்துபேரணியாகச் சென்றனர். இந்தப் போராட்டத்திற்குஆதரவாகப் பல இடங்களில் தொழிலாளர்களும் இணைந்து கொண்டனர். பொதுமக்களும் தங்களது வீடுகளில் இருந்தபடியே பாத்திரங்களைத் தட்டி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.இந்நிலையில், காவல்துறையின் வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கல்விக்கான நிதி வெட்டைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு ழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன. மாணவர்களின் போராட்டத்திற்குத் தொழிற்சங்கங்கள், பெண்ணுரிமை அமைப்புகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் முழுமையான ஆதரவு அளித்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.