சிலியில் எரிபொருள் விலை உயர்வு நாடு முழுவதும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்
13 Nov 2026, 9:44 pm

சிலியில் எரிபொருள் விலை உயர்வு நாடு முழுவதும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்

சாண்டியாகோ, நவ.13-சிலி நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை மறித்துத் தீவிரப் போராட்டம்நடத்தி வருகின்றனர்.ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரின் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விலை கடுமையாகஉயர்ந்துள்ளது.டீசல் மட்டுமே சுமார் 74 சதவிகிதம் வரை உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் கடுமையாகஉயர்த்தியுள்ளது.

டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை முதல் நாடுமுழுவதும் சாலைகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சிலியின் சுமார் 80 சதவீத லாரி ஓட்டுநர்களைப் பிரதிநிதித்து வப்படுத்தும் ‘ஃபியூர்சா டெல் நோர்டே’ (Fuerza del Norte) தொழிற்சங்கம் மற்றும் ‘நோ+டேக்’ (No+TAG) என்ற பெயரில் இயங்கும் அமைப்பு ஆகியவை இணைந்து இந்தப் போராட்டத்தை ஒருங்கி ணைத்துள்ளன.

“நாங்கள் எங்கள் பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்டோம்; கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நஷ்டத்திலேயே பேருந்துகளை இயக்கி வருகிறோம்” என்று பேருந்து உரிமைகொண்டுவர அரசு அதிகாரிகள் போராட்டக் குழுத் தலைவர்களுடன் செவ்வாய்க்கிழமைபேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகுசெய்தியாளர்களிடம் பேசிய‘நோ+டேக்’ இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் ஆண்ட்ரேஸ் அலார்கான், “அனைவருக்கும் தீர்வு காணக்கூடிய எந்தவொரு உடன்பாடும் அரசாங்கத்திடம் இல்லை; எனவே வேலைநிறுத்தம் தொடரும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.இதனிடையே, அந்நாட்டின் நிதித்துறை அமைச்சர் டேனியல்மாஸ், மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை க்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நெடுஞ்சாலைகளில் போராடுபவர்களை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும் என மிரட்டலும் விடுத்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர் களின் போராட்டத்தால் நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு சரக்குப் பரிமாற்ற நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப் பட்டுள்ளது.எரிபொருள் விலையேற்ற காரணத்தால் சிலி ஜனாதிபதி ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் தலைமை யிலான அரசு மீது கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களுக்கு அதிருப்தி கடுமையாகஅதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.