பாலர் பூங்கா பருத்திச் செடி! - அருப்புக்கோட்டை செல்வம்
16 May 2026, 8:19 pm

பாலர் பூங்கா பருத்திச் செடி! - அருப்புக்கோட்டை செல்வம்

பச்சை நிறத்தில் பருத்திச்செடி பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் பஞ்சை உடலில் சுமந்து கொண்டு பருவம் வந்ததும் வெடிக்கும்!

அரும்பாய் ஆகி அதன்பின்னே அழகுக் காயாய் மாறும் விரும்பிச் சுவைக்கும் கனியாகாமல் வெண்மை காட்டிச் சிரிக்கும்!

விதையைப் பிழிந்து காய்ச்சும் போது பருத்திப் பாலாய் ஆகும் பஞ்சை ஆலை கொண்டு போக பருத்தி நூலாய் ஆகும்!

வண்ணம் பலவாய் அதிலே சேர்க்க வடிவம் அழகாய் ஆகும் எண்ணம் போல ஆடைக ளெல்லாம் தறியில் உருவாய் ஆகும்!

மென்மை யான பருத்தி ஆடை வெயிலுக்கு இதமாய் ஆகும் நன்மை செய்தே நலமும் தந்து உடலுக்கு குளிர்ச்சியாகும்!