முந்தய பக்கம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அன்பையும், சமாதானத்தையும் பகிர்ந்து கொண்ட குழந்தைகள்!

25 Dec 2025, 4:24 pm
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அன்பையும், சமாதானத்தையும் பகிர்ந்து கொண்ட குழந்தைகள்!
<p><strong>கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அன்பையும், சமாதானத்தையும் பகிர்ந்து கொண்ட குழந்தைகள்!</strong></p> <p>கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழனன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், சென்னையில் சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்நிலையில், மதுரையில் தூய மரியன்னை தேவாலயத்தில், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று முக்கிய மதங்களையும் அடையாளப்படுத்தும் வகையில் உடையணிந்த குழந்தைகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்று இனிப்பு வழங்கி அன்பையும், சமாதானத்தையும் பரிமாறிக் கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram