தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீர்தேக்கத்தில் நீந்தி விளையாடும் சிறுவர்கள்! போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

21 Dec 2025, 3:21 pm
நீர்தேக்கத்தில் நீந்தி விளையாடும் சிறுவர்கள்! போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
<p><strong>நீர்தேக்கத்தில் நீந்தி விளையாடும் சிறுவர்கள்! போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்</strong></p> <p>தருமபுரி, டிச.21- வாணியாறு நீர்தேக்கத் தில் ஆபத்தை உணராமல் சிறு வர்கள் நீந்தி விளையாடி &nbsp;வருவதால், பொதுப்பணித் துறையினர் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என &nbsp;பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணி யாறு நீர்தேக்கம் அமைந்துள்ளது. சில வாரங்களாக சேர்வ ராயன் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரண மாக, வாணியாறு அணை அதன் முழு கொள்ளளவான 65 &nbsp;அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி யளிக்கிறது. அணையை சுற்றிப் பார்ப்பதற்காக பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்ற னர். அப்போது அணையின் இடதுபுற உபரிநீர் திறப்பு பகுதியை யொட்டி சிறுவர்கள் ஆபத்தை உணராமல் ஆற்றுப்பகுதி யில் இறங்கி குளித்தும் விளையாடியும் வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சுழல் மிகுந்த பகுதியில், &nbsp;களிமண் நிறைந்துள்ளதால் சேற்றுப் பகுதியில் கொடி செடிக ளில் சிறுவர்கள் சிக்கிக் கொண்டால், உயிருக்கு ஆபத்தை &nbsp;ஏற்படுத்தும். இவற்றை அறியாமல் சிறுவர்கள் தண்ணீரில் &nbsp;விளையாடுகின்றனர். எனவே, அதிகாரிகள் உடனடியாக &nbsp;சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாக்கப்பட்ட &nbsp;பகுதியாகவும், இந்த இடத்தில் தண்ணீரில் இறங்கி யாரும் &nbsp;குளிக்கக்கூடாது என விழிப்புணர்வு பதாகைகளை வைக்க &nbsp;வேண்டும், என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.