தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமுஎகச, பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் கோடை திருவிழா

31 May 2026, 11:02 pm
தமுஎகச, பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் கோடை திருவிழா
<p><strong>தமுஎகச, பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் கோடை திருவிழா</strong></p><p>சேலம், மே 31- தமுஎகச ஜலகண்டபுரம் கிளை மற்றும் பாலர் பூங்கா நங்கவள்ளி ஒன்றியம் சார்பில், குழந்தைகள் கோடை திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் ஜல கண்டபுரம் கிளை மற்றும் பாலர் பூங்கா நங்கவள்ளி ஒன்றியம் சார் பில், குழந்தைகள் கோடை திரு விழா சனியன்று ஜலகண்டபுரம் ராம லிங்கம் செட்டியார் கிருஷ்ணவேணி அம்மாள் மண்டபத்தில் நடைபெற் றது. துவக்க விழாவிற்கு தமுஎகச கிளைத் தலைவர் மேவை.சண்முக ராஜா தலைமை வகித்தார். செயலா ளர் செங்கோட்டுவேல் வரவேற்றார். குழந்தைகள் கோடை திருவிழா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் அறிமுகவுரை யாற்றினார். சிபிஎம் நங்கவள்ளி ஒன் றியச் செயலாளர் கிருஷ்ணவேணி வாழ்த்திப் பேசினார். தமுஎகச மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், பாலர் பூங்கா மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதன்பின் கதை கூறல், கதை எழுதுதல், ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல், சங்க இலக் கியங்கள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல் வேறு போட்டிகள் நடைபெற்றன. மேலும், சிலம்பம், கராத்தே, நட னம், தனிநபர் நடிப்பு உள்ளிட்ட பல் வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து குழந்தைகளை உற்சாகப் படுத்தும் வகையில், தமிழ்நாடு அறி வியல் இயக்கம் திண்டுக்கல் வீரய்யா “மந்திரமா? தந்திரமா?” மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் அஸ்ட்ரோ கிளப் மேகலா “வானத் தைச் சுற்றிப் பார்க்கலாம் வாங்க” என்ற தலைப்பில் வானியல் குறித்து விளக்கம் அளித்தார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பாலர் பூங்கா ஒன்றிய பொறுப்பா ளர் கவிதா தலைமை வகித்தார். பாலர் பூங்கா மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கே.ராஜாத்தி சிறப்பு ரையாற்றினார். மினர்வா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் தாமரைச் செல்வி வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசளித்துப் பாராட்டினார். பின்னர் “தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்வு” நடை பெற்றது. இந்நிகழ்வில் மாணவர் கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வியாழன், சந்திரன் உள்ளிட்டவற்றை கண்டு மகிழ்ந்த னர். இந்நிகழ்ச்சியில், தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர்கள் கல் யாண சுந்தரம், கற்பகம், கிளை நிர் வாகிகள், பாலர் பூங்கா ஒன்றியத் தலைவர் பூபாலன், செயலாளர் இதயஶ்ரீ, பொருளாளர் சண்முகப் பிரியா, 200க்கும் மேற்பட்ட குழந்தை கள் மற்றும் பெற்றோர் பங்கேற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.