சிதம்பரம் அருகே குழந்தைகள் அறிவியல் இயக்க மாநாடு
9 Nov 2025, 4:12 pm
<p><strong>சிதம்பரம் அருகே குழந்தைகள் அறிவியல் இயக்க மாநாடு</strong></p>
<p>சிதம்பரம், அக். 9 – சிதம்பரம் அருகே சி. முட்லூரில் உள்ள அட்சயா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் (TNSF), அட்சயா மந்திர் பள்ளியும் இணைந்து நடத்திய 34வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் திருமதி. தனலட்சுமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்டப் பொருளாளர் மணிமொழி, முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் சுப்பிரமணி, அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல்சார் அறிவியல் துறை இயக்கு நர் இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாணவர்களின் அறிவி யல் மதிப்பீடுகளை ஆய்வு செய்து, சிறந்த இளம் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட் டனர். மண்டல மாநாட்டிற்காகத் தேர்வு செய்யப்பட்ட 11 குழுக்களைச் சேர்ந்த மாண வர்களுக்கும், அவர்களின் வழிகாட்டி ஆசிரி யர்களுக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல்சார் அறிவியல் துறையின் முன்னாள் இயக்குநர் திரு. அனந்தராமன் பரிசுகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர், “இந்த மாநாடு மாணவர்களின் ஆய்வு மனப்பான்மையை வளர்த்து, அவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்கிட பல்வேறு பணிகளில் ஈடுபட வழிகாட்டியாக உள்ளது” என்று வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பூர்வசந்திரன், துணைச் செயலாளர் கோபிநாத், செயற்குழு உறுப்பினர்கள் பரிமளா, செந்தில், முருகன், அனுப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
