குழந்தைகளை சமமாக நடத்துவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்
30 Mar 2026, 3:40 pm
<p><strong>குழந்தைகளை சமமாக நடத்துவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 30- அனைத்து குழந்தைகளையும் சாதி மத பாகுபாடு இன்றி சமமாக நடத்துவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி நாமக்கல் மாவட்டக் குழு சார்பில், மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் மனு அனுப்பியுள்ளனர். அம்மனுவில், நாமக்கல் மாவட் டம், ராசிபுரம் ஒன்றியம் காக்கா வேரி சிற்றுராட்சியில் உள்ள புதுவ லவு கிழக்கு மேற்கு பகுதியில் ஒரே இடத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் கடந்த 40 ஆண்டுக ளுக்கு மேலாக இயங்கி வருகி றது. இதுகிழக்கு பகுதியில் உள்ள மையத்தில் பட்டியலின குழந்தை கள் மட்டுமே அனுமதிக்கப்படுவ தாகவும், மேற்கு பகுதியில் பிற்ப டுத்தப்பட்ட குழந்தைகள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் இதன் மூலம் சாதிய பாகுபாடு தொடர்ந்து செயல்பாட்டில் இருப் பதாகவும் தனியார் தொலைக் காட்சியில் அண்மையில் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு குறித்து வருவாய்துறை அதிகாரி கள் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற் கொண்டுள்ளனர். இந்த செய்தி கள் வெளியான பிறகு மையத்தில் இருந்த குழந்தைகளை மாற்றி தற் காலிக நடவடிக்கைகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள் ளது. இவ்வாறான மேலோட்டமான நடவடிக்கையை எடுப்பது உண்மைத்தன்மையை மறைக் கும் செயலாகும். எனவே தமி ழகத்தில் தேர்தல் கால நேரத்தில் இத்தகைய பாகுபாடும், அதனை மறைத்திட நிர்வாகம் மேற் கொள்ளும் நடவடிக்கைகளும் மாநில அரசின் நேர்மையான நட வடிக்கையை பின்னுக்குத் தள்ளி, எதிர்க்கட்சி அரசியலாளர்கள் ஆதா யம் தேடி பிரச்சாரம் செய்திட ஊக்கு விப்பதாக அமைந்துவிடும் என கருதுகிறோம். இதன் உண்மை தன்மையை உறுதி செய்திட, எங்களைப் போன்ற மக்கள் உரிமை சமூக நலனை பாதுகாக்கும் அமைப்புகளுக்கு இந்த மையங்க ளின் 2021 முதல் 2026 வரையிலான குழந்தைகள் வருகை பதிவேடு களை ஆய்வு செய்திட நகல்கள் வழங்கிட வேண்டும். இந்த நட வடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது என்பதை உத் திரவாதப்படுத்திட உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து குழந்தைகளையும் சாதி மத பாகுபாடு இன்றி சமமாக நடத்துவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த மனுவினை, ததீஒமு மாநில துணைச் செயலாளர் பி. பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் பி. செல்வராஜ், செயலாளர் கி.தங்க மணி, பொருளாளர் ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் அளித்தனர்.</p>
