அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
20 Nov 2025, 3:46 pm
<p><strong>அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்</strong></p>
<p>சென்னை, நவ.20- அண்ணா நூற்றாண்டு நூல கத்தில் சிறார் அறிவியல் பூங்காவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதனன்று (நவ.19) திறந்துவைத்தார். 2024-25 ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் அன்பில் மகேஸ் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறுவர்க ளுக்கான சிறார் அறிவியல் பூங்கா 80.24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார் . இந்த நிலையில், சிறார் அறிவியல் பூங்கா நிறுவப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் புதனன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த அறிவியல் பூங்காவில் குழந்தைகளுக்கு அறிவியல் கருத்துகளை நடைமுறை அனுபவத்தின் மூலம் கற்றுக் கொடுத்து அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் அறிவியல் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. அறிவியல், தொழில்நுட்பம், பொறியி யல் மற்றும் கணிதம் போன்ற துறை களில் குழந்தைகள் ஆர்வம் கொள்ளும் வகையில் அறிவியல் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ள‌ன. குழந்தைகள் கற்றல் செய்முறையில் நேரடியாக ஈடுபட்டு, அறிவியல் கோட்பாடுகளை அனுபவத்துடன் கற்கும் வகையில் 21 சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அனைத்து சாதனங்களை யும் மாணவர்களுடன் சேர்ந்து இயக்கிப் பார்த்தார். சிறார் அறிவியல் பூங்காவில் இடம் பெற்றுள்ள 21 சாதனங்களில், 10 சாதனங்கள் STEM (Science, Technology, Engineering and Mathematics) ஒருங்கி ணைக்கும் வகையில் அமைந்து ள்ளன. மேலும், 8 சாதனங்கள் இயற்பியல், 2 சாதனங்கள் உயிரியல், 1 சாதனம் கணிதம் துறை களில் குழந்தைகளுக்கு நடைமுறை அனுபவத்துடன் கற்க முடியும். சிறார் அறிவியல் பூங்கா குடும்பங்களும், பள்ளிகளும் இணைந்து அறிவியல் கலாச்சாரத்தை உருவாக்கும் தலமாகவும் செயல்படும். இந்த அறிவியல் பூங்காவில் மிதிவண்டியை இயக்குவது கார் ஓடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையில் மின்விளக்குகள் எரியும் போது அதனை தொடுவதன் மூலம் பாயிண்ட் அடித்து அவர்க ளின் நினைவாற்றலையும் ஒருங்கி ணைந்த திறனையும் சோதிக்கும் வகையில் மின் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ‌ முப்பரி மாணம் வடிவில் மணல் கொண்டு அமைக்கப்படும் வடிவமைப்பிற்கு ஏற்ப மழை நீர் வழி என அதற்குரிய வண்ணங்களை கொடுக்கும் வகையில் ஒரு இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.</p>
