தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பூந்தமல்லியில் 7 வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கொடூர பாலியல் வன்கொலை! குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

15 Jun 2026, 10:29 pm
பூந்தமல்லியில் 7 வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கொடூர பாலியல் வன்கொலை! குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

பூந்தமல்லியில் 7 வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கொடூர பாலியல் வன்கொலை! குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

திருவள்ளூர், ஜூன் 15 - கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லியில் சிறுமிகள் கொடூரமான வகையில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்ற வாளிகளைத் தண்டிக்கக் கோரி பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி சிப்காட் அருகே உள்ள புதுப்பேட்டை யில், வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு பீகாரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி யின் 3 வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இதையடுத்து குழந்தையைத் தேடியபோது, அருகில் உள்ள புதரில் சிறுமி ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டார். முத லில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பி னும், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை சிறுமி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வடமாநில இளைஞர் பிபின் மஞ்த என்பவரைக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பொன்னேரி சார் ஆட்சியர் அப்துல் ராசிக் நேரில் ஆய்வு நடத்தினார்.

போதைப்பொருள் புழக்கம்

அப்போது, வெளிமாநிலத் தொழிலா ளர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும், சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும், காவல்துறை ரோந்து மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுக்க கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். இப்பகுதியில் கஞ்சா மற்றும் ஹான்ஸ் போன்ற போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிபிஎம் நேரில் ஆய்வு

சம்பவ இடத்திற்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், கைதான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கும்பல் பாலியல் வன்முறை நடந்ததா என்பது குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். மேலும், வெளிமாநிலத் தொழி லாளர்களின் விவரங்களைச் சேகரித்து, காவல்துறை, வருவாய்த்துறை, தொழிலா ளர் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து கூட்டுக்கூட்டம் நடத்தி தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தினார். கட்சியின் வட்டச் செயலாளர் டி. கோபால கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் இ. ராஜேந்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. பத்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பூந்தமல்லியில் 7 வயது சிறுமி

இதேபோல, பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கார் ஓட்டுநரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள னர்.

காட்டுப்பாக்கம் பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 7 வயது மகள், அங்குள்ள அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். ஞாயிறு மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, நீண்ட நேரத்திற்குப் பிறகு அழுதபடியே வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற தனியார் கார் ஓட்டுநர், தன்னை மயானத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்துச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி சரவணனைக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.