முந்தய பக்கம்

குழந்தைக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு சாகும் வரை சிறை

7 Mar 2026, 2:36 pm
குழந்தைக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு சாகும் வரை சிறை
<p><strong>குழந்தைக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு சாகும் வரை சிறை</strong></p> <p>தஞ்சாவூர், மார்ச் 7 - &nbsp;தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே &nbsp;பட்டீஸ்வரம் நாதன்கோ வில் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் எம்.முருகராஜ் (45). &nbsp;வெல்டிங் தொழிலாளி யான இவர் ஒன்றரை வயது பெண் குழந் தைக்கு 2023 ஏப்ரல் 20 ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து கும்பகோ ணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து முருக ராஜை கைது செய்தனர். &nbsp;இது தொடர்பாக தஞ்சா வூர் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து முருகராஜுக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்ட னையும், ரூ. 1,000 அபராத மும் விதித்து, வெள்ளிக் கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 8 லட்சம் நிவாரணத் தொகை பெற்றுக் கொடுக் குமாறும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு வழக்குரைஞர் சசி ரேகா, காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, தலைமைக் &nbsp;காவலர் அபர்னா ஆகி யோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. &nbsp;இராஜாராம் பாராட்டி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram