சிக்குவின் கடல் பயணம் - சாந்தி சரவணன்
31 Oct 2026, 9:49 pm

சிக்குவின் கடல் பயணம் - சாந்தி சரவணன்

குட்டி மீனு சிக்கு. படு சூட்டி. அதற்குச் கடல் மிகவும் பிடிக்கும். சலசலக்கும் அந்த அலைகளின் ஓசை அதற்கு ரீங்காரமாகக் கேட்டுக்கொண்டே இருக்கும். சிக்குவின் நண்பன் புக்கு. சிக்குவிற்குப் புக்குவை ரொம்பப் பிடிக்கும்.

சிக்குவிற்கு ஒரு குணம் உண்டு. அது தன் அம்மா சொல்வதை எதையும் கேட்காது; எப்போது கடல் அலைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கும்.

அம்மா புல்லு, “சிக்கு, எத்தனை முறை சொல்கிறேன், கடலிடம் சண்டை போடாதே” எனச் சொன்னவுடன், சிக்கு, “அம்மா, நான் சண்டை போடலமா...” என்றது.

ஆனால், அது கடல் அலைக்கு எதிர் திசையிலேயே செல்லும். அப்படிப் போகும்போது மிகவும் சிரமப்படும்.

பலமுறை அம்மா புல்லு, “சிக்கு, நீ அம்மாவுடன் வா. நாம் அலைகளுக்குக் கீழ் கடலின் சற்று ஆழத்தில் நீந்தலாம். அப்படி நீந்தினால் மிகவும் எளிதாகப் பயணிக்கலாம்” என்றாலும் சிக்கு கேட்கவே கேட்காது.

ஒருநாள் புக்கு, “டேய் சிக்கு, எங்க அப்பா கடலாடிகளிடமிருந்து ஒரு குட்டி போட் வாங்கி வந்து இருக்காருடா... வா, நாம் இருவரும் சேர்ந்து ஜாலியாகக் கடல் பயணம் போகலாம்” என்றது.

சிக்குவிற்கு ஒரே கொண்டாட்டம்! “ஹாய் ஜாலி! ஹாய் ஜாலி! நாங்க கப்பலில் கடல் முழுவதும் சுற்றிப் பார்க்கப் போறோம்” எனக் குதித்தது.

இருவரும் கப்பலில் ஏறியவுடன் புக்குவால் கப்பலைச் செலுத்த முடியவில்லை. புக்குவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை; அழ ஆரம்பித்துவிட்டான்.

உடனே, சிக்குவிற்கு அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. கப்பலிலிருந்து கீழே குதித்து நீரின் திசையைப் பார்த்தது.

அப்போதுதான் சிக்கு, ஆமை மாமா நீரின் திசையில் அமர்ந்தபடி வேகமாகப் பயணித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தது. இதைத்தான் நம் அம்மா நமக்குச் சொல்லியிருக்காங்க எனவும் புரிந்துகொண்டது.

“டேய் சிக்கு” என்ற புக்குவின் குரல் அவனின் நினைவலைகளைத் திருப்பியது.

“தள்ளுடா புக்கு, கப்பலை நான் செலுத்துகிறேன்” எனச் சொல்லி, கப்பலை நீரின் திசையை அறிந்து செலுத்தியது. கப்பலைத் தண்ணீரே அழகாகத் தாங்கிச் சென்றது.

அடடே, என்ன ஆச்சரியம்! கப்பல் அழகாகப் பயணிக்கத் தொடங்கியது. சிக்குவிற்கு அம்மாவின் முகம் கண்முன்னே தோன்றியது.

“இப்போ புரியுதா சிக்கு, அம்மா ஏன் நீரின் திசையில் சற்று ஆழத்தில் பயணம் செய்யச் சொல்கிறேன் என...”

அவன் மனசுக்குள் அம்மாவின் குரல் கேட்டது.

சிக்கு தன் தவறை உணர்ந்தது. “அம்மா சொல்வது சரிதான்; நம் கப்பல் பயணத்தால் அதை உணர முடிந்தது. தேங்க்ஸ்!”

“இனி நான் சூழலைப் புரிந்து பயணிப்பேன்” என்றது சிக்கு. “சீக்கிரமாக வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சாரி சொல்ல வேண்டும். வா புக்கு, வேகமாகப் போகலாம்” என்று கூறி, நீரோட்டத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியாக வீட்டுக்கு நீந்திச் சென்றது.