முந்தய பக்கம்

2026 ஆம் ஆண்டு போதையை ஒழிப்பதற்கு சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் சபதம்

31 Dec 2025, 3:37 pm
2026 ஆம் ஆண்டு போதையை ஒழிப்பதற்கு சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் சபதம்
<p><strong>2026 ஆம் ஆண்டு போதையை ஒழிப்பதற்கு சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் சபதம்</strong></p> <p>திருப்பூர், டிச.31 - 2026 ஆம் ஆண்டில் போதை இல்லா தமிழ்நாட்டை உரு வாக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு திருப்பூர் சிக்கண்ணா &nbsp;அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட் டம் அலகு - 2 சார்பாக புதனன்று கல்லூரி வளாகத்திலுள்ள கும ரன் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி &nbsp;முதல்வர் கிருஷ்ணன் தலைமையேற்று பேசினார். அவர் &nbsp;கூறுகையில், போதை என்பது இளைஞர்களின் எதிர்கா லத்தை சீரழிக்கும் கொடிய அரக்கன். கஞ்சா, குட்கா, அபின், &nbsp;கூலிப், கொக்கைன் என பல்வேறு வடிவங்களில் போதை என் னும் அரக்கன் நம்மிடையே உலாவி வருகிறான். போதை உடல்நலம் மற்றும் மனநலத்தை பாதித்து வாழ்க்கையை சீர ழிக்கும். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட் டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார். பேராசிரியர் சக்தி செல்வம் வாழ்த்துரை வழங்கினார். பிறகு மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நவீன் குமார், &nbsp;ரேவதி, தீபன் சந்தோஷ், பிரியங்கா ஆகியோர் தலைமை யில் மாணவ, மாணவிகள் 2026 புத்தாண்டை போதையில்லா &nbsp;தமிழ்நாடாக உருவாக்குவதற்கு, போதை வேண்டாம் போன்ற உறுதிமொழிகளை எடுத்து கொண்டார்கள். நிகழ் வில் ஏராளாமான மாணவ மாணவிகள் கலந்து கொண்ட னர். இறுதியாக பேராசிரியை சந்தனமாரி நன்றியுரை வழங்கி னார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram