தேசிய அளவில் சாகச பயிற்சி முகாமிற்கு சிக்கண்ணா கல்லூரி மாணவர் தேர்வு
5 Dec 2025, 4:21 pm
<p><strong>தேசிய அளவில் சாகச பயிற்சி முகாமிற்கு சிக்கண்ணா கல்லூரி மாணவர் தேர்வு</strong></p>
<p>திருப்பூர், டிச.5 - இமாச்சலப் பிரதேசத் தில் நடைபெறும் தேசிய அள விலான சாகச பயிற்சி முகா மிற்கு சிக்கண்ணா அரசு கல் லூரி மாணவர் தேர்வு செய் யப்பட்டுள்ளார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக தேசிய சாகச பயிற்சி முகாம் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 10 நாட்கள் இமாச் சலப் பிரதேசத்தில் உள்ள மணாலியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் நீர் விளையாட்டுகள், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பயிற்சிகள், மலையேற்றம், ஆற்றை கடத்தல், சறுக்குப் படகு பயணம், மிதக்கும் படகில் நதியின் ஓட்டத்தில் செல்லும் மிதப்பியக்கம், கயிறு தொடர்பான செயல்பாடுகள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக பாரதியார் பல்கலைக் கழகத்தி லிருந்து ஐந்து மாணவர்கள், ஐந்து மாணவிகள் என மொத்தம் 10 பேர் இம்முகாமில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள னர். இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 ஐ சேர்ந்த மாணவர் பிரவீன் (2 ஆம் ஆண்டு வணிகவியல் துறை) தேர்வு செய்யப்பட்டுள் ளார். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் இந்த மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவர் ஆவார். இவரை பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, கல்லூரி முதல்வர் கிருஷ் ணன், அலகு - 2 அலுவலர் மோகன்குமார், துறை தலைவர் அமிர்தராணி, பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.</p>
