முந்தய பக்கம்

தேசிய ஒருமைப்பாடு முகாமிற்கு சிக்கண்ணா கல்லூரி மாணவர் தேர்வு

4 Feb 2026, 6:28 pm
தேசிய ஒருமைப்பாடு முகாமிற்கு சிக்கண்ணா கல்லூரி மாணவர் தேர்வு
<p><strong>தேசிய ஒருமைப்பாடு முகாமிற்கு சிக்கண்ணா கல்லூரி மாணவர் தேர்வு</strong></p> <p>திருப்பூர், பிப்.4- ஒன்றிய இளைஞர் நலன் மற் றும் விளையாட்டுத் துறை அமைச் சகம், பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து சேலம், சங்ககிரி விவே கானந்தா பெண்கள் கலை அறிவி யல் கல்லூரியில் பிப்.5 முதல் 11ஆம் தேதி &nbsp;வரை ஏழு நாட்கள் தேசிய ஒருமைப்பாடு முகாம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, அசாம், புதுச்சேரி ஆகிய 12 மாநில நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் மொத்தம் 200 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் கலந்து கொள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தில் இருந்து மூன்று மாணவர்கள், மூன்று பெண் கள் தேர்வாகி உள்ளனர். அவர்க ளில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர் முகுந்தன் (விலங்கி யல் துறை) தேர்வாகி உள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இவர் ஒரு வர் மட்டுமே தேர்வாகி உள்ளார். அரசு கல்லூரி மாணவர் இவர் ஒருவர் மட் டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. &nbsp;இவரை சென்னை நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் சாமுவேல் செல் லையா வாழ்த்தினார். பாரதியார் பல்கலைக் கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப் பாளர் பார்த்தசாரதி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு-2 திட்ட அலுவலர் மோகன்குமார், பேராசிரியர்கள் மற்றும் &nbsp;நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் புத னன்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram