தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தலைமைச் செயலாளர் மாற்றம்: நடுநிலைமை மீதான நிழல்?

12 Apr 2026, 5:30 am
தலைமைச் செயலாளர் மாற்றம்: நடுநிலைமை மீதான நிழல்?

தலைமைச் செயலாளர் மாற்றம்: நடுநிலைமை மீதான நிழல்?

தமிழ்நாடு வரலாற்றில் தேர்தல்கள் எப்போதும் ஒரு பெரும் திருவிழா. ஆனால், அந்தத் திருவிழாவின் தேர்தல் என்று வாக்கு இயந்திரத்தில் மட்டுமல்ல, அதனை இயக்கும் நிர்வாக இயந்திரத்திலும் தங்கியிருக்கிறது. தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இருந்த முரு கானந்தம் மாற்றப்பட்டு, முனைவர் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

'நிர்வாக நடுநிலைமைக்காக' எனத் தேர்தல் ஆணையம் கூறும் விளக்கம், பதில்களை விடப் புதிய கேள்விகளையே எழுப்பியுள்ளது. யார் இந்த சிவ்தாஸ்? 1990-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவ்தாஸ், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த 2017 முதல் 2021 வரை உள்ள காலகட்டத்தில் அவரது முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியவர்.

ஒரு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் என்பது வெறும் நிர்வாகப் பதவி அல்ல; அது ஆட்சியின் நாடியை உணர்ந்த, கொள்கை முடிவுகளில் நேரடியாகப் பங்கெடுக்கும் நம்பிக்கைக்குரிய பதவியாகும். ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைமையின் நிழலாக இருந்தவர், தற்போது அதே தலைமை, போட்டி யாளராகக் களம் காணும் தேர்தல் நேரத்தில் மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரியாக நியமிக்கப்படுவது நிர்வாக சமநிலையைக் கேள்விக்குறியாக்குகிறது.

விசாரணைகளின் நிழலில் நிர்வாகம். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்தான், சுமார் 3,120 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் அன்றைய முதலமைச்சரின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், 11 மாவட்டங்களில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட முறைகேடுகள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைகள் நிலுவையில் உள்ளன.

இத்தகைய சூழலில் புகார்களின் காலத்தில் முதன்மைப் பொறுப்பில் இருந்த ஒருவரைத் தற்போது தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளராகத் தேர்வு செய்திருப்பது நடுநிலையான நகர்தானா என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுகிறது. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை. நீதி வழங்கப்படுவது மட்டுமல்ல, அது வழங்கப்படுவதாகத் தோன்றுவதும் முக்கியம் என்கிறது சட்டம்.

முழுமையான மாற்றப்பட்டதற்கான தெளிவான காரணத்தை அறிவிக்காமல், சந்தேகமான நிர்வாகத்தின் நிழலில் இருப்பவரை நியமிப்பது மக்களின் நம்பிக்கையில் விரிசலை உண்டாக்கும். ஒன்றிய அரசின் பரிந்துரையில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் சூழலில், அதன் 'தனிப்பயன்' அதிகாரம் எந்த அளவு ஆழமானது என்பது கேள்வியாகவே எஞ்சுகிறது.

வாக்காளர்கள் வரிசையில் நிற்கும்போது, தங்கள் வாக்கு நேர்மையான முறையில் எண்ணப்படும் என்ற ஒரே நம்பிக்கையில்தான் நிற்கிறார்கள். அந்த நம்பிக்கையைக் காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். நிர்வாக இயந்திரம் தடையற்ற முறையில் இயங்குவதை உறுதி செய்வதால்தான் மக்களிடம் நம்பிக்கை தரும். இந்த விவகாரம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசியல் கட்சிகளின் மட்டுமல்ல, அறிவுஜீவிகள் மற்றும் குடிமைக் கடமையாகும். -சி.சுப்ரமணியு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.