தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

26 Nov 2025, 3:40 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டுக்கு  தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு

சென்னை: பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை  வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். மனிதவள மேலாண்மைத் துறை நவம்பர் 24 முதல் தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக்  வருகை பதிவேடு முறையினை அறிமுகப்படுத்தி யுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், இணைச் செயலா ளர் லெனின் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 1946 முதல் செயல்பட்டு வரும் சங்க நிர்வாகிகளை எந்த நிலையிலும் கலந்தாலோசிக்காமல் இந்த முறையை  அமல்படுத்தியுள்ளதாக சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ள னர். தலைமைச் செயலக அலுவலக நடைமுறைப்படி, பிரிவு அலுவலர் நிலை வரை மட்டுமே வருகைப் பதி வேட்டில் கையெழுத்திட வேண்டும் என்ற விதி இருந்தும்,  பயோமெட்ரிக் முறையில், கூடுதல் செயலாளர் முதல் பதி வேடு எழுத்தர் வரை கொண்டு வரப்பட்டுள்ளது என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. மாலையில் 5.45 மணிக்கு அலுவலகத்தை விட்டுச்  செல்லும் போதும் பயோமெட்ரிக் முறையில் பதிவிட  வேண்டும் என்ற உத்தரவும் அலுவலக நடைமுறை களுக்கு விரோதமானது என்று சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு நல்லுறவை நிலைநாட்டுமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

நுழைவு கட்டணம் நிர்ணயம் கோவை:

கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத் தில் 45 ஏக்கரில் ரூ.208. 50 கோடியில் செம்மொழி  பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவை செவ்வாயன்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  திங்கட்கிழமை (டிசம் பர் 1) முதல் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனு மதிக்கப்பட உள்ளனர். அதற்கு நுழைவு கட்டண மாக பெரியவர்களுக்கு ரூ. 15, சிறியவர்களுக்கு ரூ.5, வீடியோ கேமரா அனுமதிக்க ரூ.50, நடை பயிற்சி மேற்கொள்ள மாதக் கட்டணம் ரூ.100,  ஆண்டு கட்டணம் ரூ.1000 நிர்ணயிக்கப்பட் டுள்ளது. அதேபோல திரைப்பட ஒளிப்பதிவுக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரமும், குறும்பட ஒளிப்பதிவுக்கு ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிர மும் என நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இந்த கட்ட ணம் குறித்து நவ.28  ஆம் தேதி நடைபெறும்  மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட உள்ளது. அதன்பின் னர் நடைமுறைக்கு வரும்.

எஸ்ஐஆர் பணிகளில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம்!

சென்னை, நவ.26 - எஸ்ஐஆர் பணிகளை திறம்பட மேற்கொள்வதில்  தமிழக அளவில் 8 ஆவது இடத்திலிருந்த திருச்சி  மாவட்டம் 5 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) பணி நவ.4 ஆம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. இதுவரை 6 கோடியே 20 லட்சத்து 80,532 வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் முன்நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3 கோடியே 72 லட்சத்து 57,812 படிவங்கள் வாக்குச்சாவடி நிலை  அலுவலர் (பிஎல்ஓ ஆப்) செயலியில் பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளன.  எஸ்ஐஆர் பணிகளை சிறப்பாக மேற்கொள் வதில் தமிழக அளவில் கடந்த 3 தினங்களுக்கு முன் 8 ஆவது இடத்தில் இருந்த திருச்சி மாவட்டம்,  திங்களன்று மாலை 6 மணி நிலவரப்படி 5  ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழகத் தில் உள்ள 38 மாவட்டங்களில் எஸ்ஐஆர் பணி களை திறம்பட மேற்கொள்ளும் மாவட்டங்களை தேர்தல் ஆணையம் வரிசைப்படுத்தி உள்ளது. அதன்படி தமிழக அளவில் முதல் 10 இடங்க ளில் உள்ள மாவட்டங்கள் (சதவீத அடிப்படை யில்) - திருவண்ணாமலை மாவட்டம் 81.86 சதவீதம்  எஸ்ஐஆர் பணிகளை நிறைவு செய்து முதலி டத்தில் உள்ளது. இதற்கு அடுத்து 2 முதல் 10  இடங்களில் பெரம்பலூர் மாவட்டம் 80.74 சதவீதம்,  கன்னியாகுமரி 77.69 சதவீதம், தர்மபுரி 76.54 சத வீதம், திருச்சி 72.13 சதவீதம், அரியலூர் 72.1 சதவீதம்,  தஞ்சாவூர் 69.55, ராணிப்பேட்டை 68.33 சதவீதம், விழுப்புரம் 67.81 சதவீதம், இராமநாதபுரம் 67.52 சதவீதம் என முதல் 10 இடங்களில் உள்ளன. 50.4 சதவீதப் பணிகளை நிறைவு செய்து கோயம் புத்தூர் 37 ஆவது இடத்திலும், 45.36 சதவீதம் பணி களை நிறைவு செய்து சென்னை கடைசியாக 38  ஆவது இடத்திலும் உள்ளன.

காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி யான சம்பவம் தொடர் பான சிபிஐ விசார ணைக்கு காவல் ஆய்வா ளர் மணிவண்ணன் உள்பட ஐந்து பேர் புதன் கிழமை நேரில் ஆஜராகி னர். கடந்த 2 நாள்களாக தமிழக வெற்றி கழகத் தின் பொதுச் செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகி களான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்  உள்ளிட்டோரிடம் விசா ரணை மேற்கொள்ளப் பட்டது. இதனைத் தொ டர்ந்து கரூர் நகர காவல்  ஆய்வாளர் மணி வண்ணன் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டவர்களிடம் புதன் கிழமை சிபிஐ விசாரணை நடைபெற்றது. கோவை மாவட்டத்தை  சேர்ந்த இந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிர முகர் ராகுல் காந்தி, கரூர்  தொழில் அதிபர் செந்தில் குமார், நொய்யல் பகுதி யைச் சேர்ந்த விவசாயி கோகுலக்கண்ணன் மற்றும் தேசிய முற்போக்கு  திராவிட கழக ஒன்றிய இணைச் செயலாளர் நவலடி ஆகியோரிடம் விசா ரணை நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.