பாஜக பிடியில் சிக்கியுள்ள முதல்வர்களுக்கு அதிகாரம் கிடையாது! செங்கல்பட்டு பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு
1 Apr 2026, 4:02 pm
<p><strong>பாஜக பிடியில் சிக்கியுள்ள முதல்வர்களுக்கு அதிகாரம் கிடையாது! செங்கல்பட்டு பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு</strong></p>
<p>செங்கல்பட்டு, ஏப்.1- பாஜகவின் ‘ஆக்டோ பஸ்’ பிடியில் சிக்கியுள்ள மாநில முதல்வர்களுக்கு அதிகாரமே கிடையாது என்பதற்குப் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் சாட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்டக் குழு சார்பில் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியதன் சுருக்கம்: தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருவதால், அவர் ‘தோல்வியின் நாயக னாக’ மாறிவிட்டார். ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகவும், கட்சியின் பொதுச்செயலாள ராகவும் பொறுப்பேற்ற அவர், ஒரு இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் என எதிலுமே வெற்றி பெறவில்லை. வலு வான இயக்கமாக இருந்த அதிமுகவைச் சிதைத்து சின்னாபின்னமாக்கிய பெருமை அவரையே சாரும். ஓபிஎஸ், சசிகலா, புகழேந்தி எனப் பலரும் பிரிந்து செல்லக் காரண மானவரால், பரம்பரை பரம்பரையாகக் கட்சியில் இருந்தவர்களையே பாது காக்க முடியவில்லை. பாஜகவின் ‘ஆக்டோ பஸ்’ பிடியில் சிக்கியுள்ள மாநில முதல்வர்களுக்கு அதிகாரமே கிடையாது என்பதற்குப் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் சாட்சி. மாநில உரிமைகளையும் கல்வித் துறையையும் பறிக்கும் பாஜகவுடன் எடப்பாடி கூட்டணி வைப்பது தமிழ கத்திற்குச் செய்யும் துரோகம். சாதி அரசியல் செய்யும் பாமகவின் அன்பு மணி ராமதாஸ், தன் தந்தையையே அனு சரித்துச் செல்ல முடியாத வர்; இவர்களுடன் கூட்டணி அமைப்பதால் எந்த மாற்றமும் நிகழப்போவ தில்லை. மேலும், நடிகர் விஜய் தனது முதல் எதிரியாக திமுகவைக் கூறுவது, மக்கள் விரோத பாஜகவை அவர் மறைமுகமாக ஆத ரிப்பதையே காட்டுகிறது. வரவிருக்கும் தேர்தலில் பாஜக - அதிமுக அணிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது. எனவே, இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதி என அவர் பேசினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெ.அரி கிருஷ்ணன் வர வேற்றார் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்பு ராஜன், மாவட்ட செய லாளர் பி.எஸ்.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைச்செல்வி, வட்ட செயலாளர்கள் கே.சேஷாத்திரி, க,புரு ஷோத்தமன், எம்.செல்வம், எஸ்.ராஜா, கே.வேலன், எம்.எஸ்.அர்ஜுன் குமார், பி.கே.ரபிக், எம்.வெங்க டேசன் உள்ளட்ட பலர் பேசினர்.</p>
<p> </p>
