தீக்கதிர் முக்கிய செய்திகள்
13 Jan 2026, 3:17 pm

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் காணும் முதலமைச்சர்

சென்னை, ஜன.13- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17 ஆம் தேதி நேரில் செல்வதாக தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சங்கமம் கலை விழாவை புதனன்று தொடங்கி வைக்கிறேன் என்று முத லமைச்சர் தெரிவித்தார். சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடு எங்கும் பொங்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாக இருக்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் சென்னை, ஜன.13- இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ள ஒரு துயரச் சம்பவம் தொடர்பாகவும், தொடர்ந்து அவர்கள் எதிர்கொண்டு வரும் இன்னல்கள் தொடர்பாகவும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ஜன.13 ஆம் தேதி அதிகாலையில், இயந்திரமயமாக்கப் பட்ட மீன்பிடிப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவ தும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் மிகுந்த கவலையளிக்கிறது. மேலும், தற்போதைய நிலவரப் படி, சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட, இதுவரை மொத்தம் 83 மீனவர்களும், 252 மீன்பிடிப் படகுகளும் இலங்கைவசம் உள்ளன. சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் துயரமான மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டும், பொங்கல் பண்டிகையினை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிட ஏதுவாகவும், கைது செய்யப் பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், தொடர்ந்து இதுபோன்ற கைது நடவடிக்கைகளைத் தடுத்திட வும், ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ் விருதுகள் அறிவிப்பு

சென்னை, ஜன.13- தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கான 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கான உயரிய விருதுகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது தியாகி மு.பெ.சத்திய வேல் முருகனாருக்கு வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான விருதுப் பட்டியலில்: பேரறிஞர் அண்ணா விருது: அமைச்சர் துரைமுருகன் அண்ணல் அம்பேத்கர் விருது: சிந்தனை செல்வன் தந்தை பெரியார் விருது: வழக்கறிஞர் அ.அருள்மொழி திரு.வி.க. விருது: வே.இறையன்பு ஐ.ஏ.எஸ். காமராசர் விருது: எஸ்.எம்.இதயத்துல்லா பாரதிதாசன் விருது: கவிஞர் யுகபாரதி பாரதியார் விருது: கவிஞர் நெல்லை ஜெயந்தா கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: முனைவர் சூ.சிற.செல்லப்பா முத்தமிழறிஞர் கலைஞர் விருது: விடுதலை விரும்பி இந்த விருதுகளை வரும் ஜன.16 அன்று சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.