ஜன.8-இல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
2 Jan 2026, 3:33 pm
<p><strong>ஜன.8-இல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்</strong></p>
<p>சென்னை, ஜன.2 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், ஜனவரி 8ஆம் தேதி சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைக்கிறார். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ் நாடு அரசு வழங்கி வருகிறது. கடந்த 2025 பொங்கலின்போது நிதி நெருக்கடியால் அரசு ரொக்கப் பணம் தரவில்லை. தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கியது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வர இரண்டு வாரங்களே உள்ள நிலையில், 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசா ணையை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் சத்யபிரதா சாஹு பிறப்பித்து உள்ளார். அரசாணையில் ரொக்கப் பணம் குறித்த தகவல் இல்லை. ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகிய வற்றை மொத்த செலவினத் தொகை 248.66 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்து ரேசன் கடைகள் வாயிலாக விநியோகம் செய்ய நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது. முதலமைச்சர் விநியோகத்தை தொடங்கி வைத்த பின்னர், அனைத்து மாவட்டங்களி லும் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் கள் தற்போது அச்சிடப்பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் அறிவிப்பை பொறுத்து ஜன.4 அல்லது 5ஆம் தேதி முதல் டோக்கன்கள் பொதுமக்க ளுக்கு விநியோகிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக மிக விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
