‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’ மேம்பாலம் பிப்.21 - மதுரையில் முதல்வர் திறந்து வைக்கிறார்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’ மேம்பாலம் பிப்.21 - மதுரையில் முதல்வர் திறந்து வைக்கிறார்</strong></p>
<p>மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 1.3 கிலோமீட்டர் நீளமுடைய புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாலம் வரும் 21ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் ரூ.213 கோடி மதிப்பில் கட்டப் பட்டுள்ளது. நகரின் முக்கிய போக்குவரத்து பாதையில் உருவாக்கப் பட்டுள்ளதால், தினசரி வாகன நெரிசலை குறைக்க இது உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவாக இந்தப் பாலத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், 21ஆம் தேதி இந்த மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.</p>
