தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

1 Apr 2026, 4:02 pm
திருச்சி விரைவு செய்திகள்

ஏப்.4 இல் முதலமைச்சர்  நாகர்கோவிலில் பரப்புரை

நாகர்கோவில்.ஏப்.1- தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 4ஆம் தேதி நாகர்கோவிலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் ஆய்வு செய்தார். நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கன்னியாகுமரியில் மேயர் மகேஷ் ,நாகர்கோவில் தொகுதியில் ஆஸ்டின், பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.செல்வ சுவாமி மற்றும் குளச்சல் ,விளவங்கோடு, கிளியூர் பகுதி களின் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 4ம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தை  திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் குமரி சட்டமன்ற தொகுதி  வேட்பாளரு மான ரெ.மகேஷ்,  நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி  வேட்பாளர் ஆஸ்டினுடன்   ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டார். கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

பறக்கும் படையினரால் ரூ.8.13 லட்சம் பறிமுதல்

நாகர்கோவில்,ஏப்.1- தமிழ்நாடு சட்டமன்ற  பொதுத்தேர்தல்  அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில்  6 சட்டமன்ற தொகுதிகளில் 8 மணி நேர  சுழற்சி அடிப்படை யில்   பறக்கும் படைகள்,  நிலையான கண்காணிப்பு படைகள்  சோதனை நடத்தி வருகின்றன.  மேலும், தேர்தல் நடத்தை  விதிமீறல்களை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமீறல்க ளில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைகள் செயல்பட்டு வருகிறது.  மேற்படி பறக்கும் படை மற்றும் கண்கா ணிப்பு படை குழுவினர்களால்  மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப் பட்ட ரூ.8,13,440- ஐதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடத்தமுயன்ற 6 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ஓட்டுநர் கைது

அருமனை, ஏப் .1-  கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் எம். கே.பாரதி தலைமையில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டதுறை பகுதி யில் வந்து கொண்டிருந்த போது, இருந்த சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரியை சோதனையிட்டனர். இதில்  லாரியில் சுமார் 6000 கிலோ பொது வினியோகத் திட்ட அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது கேரளம் மாநிலத்திற்கு கடத்தப்படவிருந்தது. பிடிபட்ட  அரிசி மூட்டைகளை கோணம் அரசு கிட்டங்கியில்  ஒப்ப டைத்தனர்.  லாரி ஓட்டுநரான  பாளையங்கோட்டையைச் சேர்ந்த  தினேஷ் (வயது 25) என்பவரை பிடித்து குடிமைப் பொருள் குற்றவியல் காவல் ஆய்வாளரிடம் ஒப்ப டைத்தனர்.

கூலித்தொழிலாளி அடித்துக்கொலை : ஒருவர் கைது தூத்துக்குடி,ஏப்.1- தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி ஒருவர் கம்பால் அடித்துக் கொலை செய்தார்.  திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மனக்காவலன் பிள்ளை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சேவியர் (40). குடும்பத் தகராறு காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து தூத்துக்குடி வந்த இவர், அங்குள்ள பால விநாயகர் கோவில் தெரு வில் கூலி வேலை செய்து வந்தார். இரவு நேரங்களில் அங்குள்ள ஒரு பள்ளியின் முன்பு படுத்துத் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் சேவியர் வழக்கம் போலப் பள்ளியின் வாசலில் படுத்துத் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது அங்கு படுத்துத் தூங்குவதற்காக வந்த மற்றொரு நபருக்கும், சேவியருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த அந்த நபர் அருகில் இருந்த கம்பால் சேவியரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்தக் காயமடைந்த சேவியரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அங்கு  சிகிச்சை பலனின்றி புதனன்று காலை 6 சேவியர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல்துறை யினர்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சேவியரைத் தாக்கியவர் தூத்துக்குடி புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்த முனி யாண்டி மகன் சரவணன் (40) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சரவணனைப் போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் ரூ.60.37 லட்சம் பணம் ரூ.3.83 லட்சத்தில் மதுபானங்கள் பறிமுதல் தூத்துக்குடி,ஏப்.1- தூத்துக்குடி மாவட்டத்தில பறக்கும் படையினரால் இது வரை ரூ. 60.37 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை  முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 1 ஆம் தேதி வரை மாவட்டத்தில் பறக்கும் படை கள்  மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் வெளியிட்டுள்ளார். பறிமுதல் விவரங்கள்: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ. 60,37,330 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்குப் புறம்பாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ.3,83,714 மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனையின் போது பிடிபட்ட போதைப்பொருட்க ளின் மொத்த மதிப்பு ரூ. 6,65,600 ஆகும். தேர்தல் விதி மீறல்களைத் தடுக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களின்றி அதிகப்படியான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் மாவட்ட தேர்தல் அலுவலர் பொதுமக்களுக்கு அறி வுறுத்தியுள்ளார். விதிமீறல் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்  மாவட்ட தேர்தல் அலுவலர்  தகவல் தூத்துக்குடி,ஏப்.1- தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 24 மணி நேரமும் பொதுமக்கள் புகார் அளிக்க லாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 வருகின்ற 23.04.2026 அன்று நடை பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி களிலும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை செயல் பட்டு வருகிறது. பொதுமக்கள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 1800-599-1960, வாட்ஸ்அப் செயலி எண் – 94864 54714(what sapp), கைப்பேசி செயலி - C-Vigil, ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். வளர்ப்பு நாய் கடித்து பள்ளி மாணவி பலி தூத்துக்குடி,ஏப்.1- தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்த பின்னலாடைத் தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள், தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, வீட்டில் வளர்க்கும் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த நாயின் நகம் பட்டதில் மாணவிக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. காயம் ஏற்பட்டவுடன் மாணவி முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறவில்லை என்றும், ‘ரேபிஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி மாணவிக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நாய் கடித்ததன் மூலம் ரேபிஸ் வைரஸ் உடல் முழுவதும் பரவி இருப்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி,  மாணவி உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்பால் கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடலைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மதுரை தத்தனேரி மயானத்தில் அரசு சார்பிலே மாணவி யின் உடல் முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

நெல்லை வாக்கு எண்ணிக்கை  மையங்களில் ஏற்பாடு தீவிரம்

திருநெல்வேலி, ஏப். 1- தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ஆம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் மே 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நெல்லையில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் மே 4 ஆம் தேதி நெல்லை- நாகர்கோவில் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து பணிகளும் திட்டமிட்ட முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் உள்ளிட்டோர் வாக்கு எண்ணும் மையத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அறைகளில் சிறு சிறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் முதல் கட்டமாக பணிகள் சீரமைப்பு முடிவடைந்த நிலையில் கதவுகளின் உறுதித் தன்மை ஆய்வு செய்யப்பட்டு அங்கு சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பு அறைகளில் இருந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் மையத்திற்கு எண்ணும் கொண்டு வரப்பட்டு, கட்டுப்பாடுகள் பின்பற்றி எண்ணிக்கை நடைபெறும். இந்த செயல்முறைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் வாக்குச்சாவடி முகவர்கள், கட்சியினர் அரசியல் மொத்தமாக கூடுவதை தடுக்கும் விதமாக இரும்பு வலைகள் அடிக்கும் பணி, சுவர்கள் கட்டும் பணி உள்ளிட்டவையும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் பாஜக அலுவலகத்தில் கைகலப்பு தொண்டர்கள்

திண்டுக்கல், ஏப்.1- திண்டுக்கல் பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத்  தலைவர் முன்னிலையில் தொண்டர்களிடையே கை கலப்பு, தள்ளுமுள்ளு நடைபெற்றது. சாணார்பட்டி அருகேயுள்ள அஞ்சுகுழிப்பட்டி பகுதி யைச் சேர்ந்த வீரா என்பவர் பாஜக முன்னாள் ஒன்றியச்  செயலாளராக இருந்தார். அப்பகுதியில் ரியல் எஸ்டேட்  அதிபரிடம் ஒரு நிலம் வாங்கியுள்ளார். அந்த பிளாட்டில்  ஒரு பிளாட் பொது இடமாக இருந்த நிலையில் அந்த பொது  இடத்தில் மண் அள்ளி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தில் மண் அள்ளக் கூடாது  என்று இடத்தை விற்றவருக்கும், வீராவிற்கும் தகராறு ஏற்பட்டு வழக்குப் பதியப்பட்டு வீரா சிறையில் உள்ளார்.  சிறையிலிருந்து வீராவை ஜாமீனில் எடுக்க கட்சி வழக்கறி ஞர் அன்புவிடம் பாஜக நிர்வாகி தாமஸ் மனைவி ஆரோக்கிய மணி அணுகியுள்ளார். ஆனாலும் வீராவை  சிறையிலிருந்து வெளியே கொண்டு வர காலதாமதமாகி யுள்ளது. இந்நிலையில் திங்களன்று திண்டுக்கல் குள்ளனம் பட்டியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.விஸ்வநாதன், ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஏ.விஸ்வநாதன் ஆகியோர் வருகையையொட்டி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தாமஸ் மனைவி ஆரோக்கிய மணி வந்திருந்தார். அங்கு வழக்கறிஞர் அன்புவும் வந்தி ருந்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் பெரிதாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கட்சி யின் நிர்வாகிகள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்த னர். இந்த சம்பவம் பாஜக மாவட்ட கூட்டத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளர் விளம்பரங்களுக்கு முன் அனுமதி கட்டாயம்

தென்காசி, ஏப். 1- தமிழ்நாடு சட்டமன்ற பொ துத்தேர்தல்   வேட்பாளர்களின் விளம்ப ரங்களுக்கு எம்சிஎம்சி குழுவின் முன் அனுமதி கட்டாயம் என்று தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.கே. கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பொ துத்தேர்தலை  முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊட கச் சான்றளிப்பு மற்றும் கண்காணி ப்புக் குழு அமைக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலு வலரின்  வழிகாட்டுதல்கள்: மின்னணு மற்றும் சமூக ஊடகங்களுக்கான விதிகள், ஊடகம், தொலைக்காட்சி. உள்ளூர் கேபிள் டி.வி, வானொலி . சமூக திரையரங்குகள், பொது இடங்க ளிலுள்ள டிஜிட்டல் திரைகள் மற்றும் மொபைல் போன் வழி குறுஞ்செய்தி கள், குரல் வழி அழைப்புகள் ஆகிய வற்றில் விளம்பரம் வெளியிடும் முன் பாக கட்டாயம் எம்பிஎம்சி குழுவின் அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், விளம்பரம் வெளியிட உத்தே சித்துள்ள நாளுக்குக் குறைந்தது 3 நாட்க ளுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் இதர அமைப்புகள் குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். அச்சு ஊடகங்களுக்கான விதிகள் சாதாரண நாட்களில் நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு முன்அனுமதி தேவையில்லை (அதன் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்). இருப்பினும், அவை பின்வரும் நிபந்தனைகளை கண்டிப்பா கப் பின்பற்ற வேண்டும். விளம்பரங் கள் எம்சிஎம்சி வழிகாட்டுதல்களை மீறக்கூடாது. விளம்பரங்களில் வெறு ப்புப் பேச்சு மற்றும் அவதூறான உள்ள டக்கம் கூடாது. விளம்பரத்திற்கான வெளியீட்டாளர் மற்றும் கட்டணம் குறித்து முறையாக தெரிவிக்க வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு நாள் (23.04.2026) மற்றும் அதற்கு முந்தைய நாள் (22.04.2026)ஆகிய இரண்டு தினங்களில் நாளிதழ்களில் வெளி யாகும் அனைத்து அரசியல் விளம்ப ரங்களுக்கும் கட்டாயம் 48 மணி நேரத்திற்கு முன்னதாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழு மையாகப் பின்பற்றி, மாவட்ட நிர்வா கத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தென்காசியில் சுட்டெரிக்கும்  வெயில் : பொதுமக்கள் அவதி

தென்காசி, ஏப். 1- தென்றல் தவழும் தென் காசியில்  கோடை வெயில் சுற்றுலாப்பயணிகளையும் பொதுக்களையும் வாட்டி வதைக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தமிழ கத்தின் கடைக்கோடி தென் காசி மாவட்டத்தில் இயற்கை எழில்  நிறைந்த வயல்வெளி கள், குற்றால அருவிகள் உள்ளன. தற்பொழுது  மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயி லின் தாக்கம் அதிகரித்து வெப்பச்சலனம் ஏற்பட்டுள் ளது. இதனால் வாகனங்க ளில் செல்வோர், வயல் வெளிகளில் வேலை செய் வோர் என அனைத்து தரப்பு மக்களும் இந்த வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.