முந்தய பக்கம்

மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ

5 Apr 2026, 3:36 pm
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ
<p><strong>மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ</strong></p> <p>மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்கும் வகையில் ரோடு ஷோ நடத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் மற்றும் மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாகராஜன் ஆகியோர் மு.க. ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், இரா. லெனின், எம்.பாலசுப்பிரமணியம், வை.ஸ்டாலின், பகுதி குழு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைகளை அசைத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram