தீக்கதிர் முக்கிய செய்திகள்
6 Apr 2026, 4:15 pm

3 ஆம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி மாநிலம் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தனது இரண்டு கட்ட பிரச்சாரத்தை மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நிறைவு செய்த முதலமைச்சர், மூன்றாம் கட்டமாக புதுச் சேரி மாநிலத்தில் ஏப்.6 ஆம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கினார். இன்று சீர்காழியில்... ஏப்.7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு சீர்காழியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழ்வேளூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டி.லதா வுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கள் கோரி உரையாற்றுகிறார். அதேபோல் வேதாரண்யம், சீர்காழி, பூம்புகார், நாகை, மயிலாடுதுறை ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் முதலமைச்சர் ஆதரவு கோருகிறார். அதைத் தொடர்ந்து கடலூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரேமலதா விஜய காந்த் போட்டியிடும் திட்டக்குடி, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் போட்டியிடும் குறிஞ்சிப்பாடி, அமைச்சர் சி.வி. கணேசன் போட்டியிடும் திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, நெய்வேலி, கடலூர், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி உரையாற்றுகிறார். ஏப்.8 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட வேட்பா ளர்களுக்கும், ஏப்.9 ஆம் தேதி படப்பையில் செங்கல் பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வேட்பாளர்களுக்கும் ஆதரவு கோரி முதலமைச்சர் பிரச்சாரம் செய்கிறார்.

6 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து நடைபெற்ற தேர்தலில், திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 பேர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்ததால் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனை வரும் திங்கட்கிழமை மாநிலங்களவையில் எம்.பி.க்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங் களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஏப்.13 கந்தர்வகோட்டையில் வைகோ பிரச்சாரம்

சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மா. சின்னதுரை இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். கட்சி ஊழியர்களும் தலைவர்களும் தொகுதி முழுவதும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஏப்ரல் 13 ஆம் தேதி கந்தர்வகோட்டை தொகுதியில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் மா.சின்னதுரைக்கு வாக்குகள் கோரி பரப்புரை மேற்கொள்கிறார்.

புதிய கருத்துக் கணிப்பில் திமுக அணிக்கே வெற்றி!

சென்னை: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், ‘இன்சைட் எலக்சன்’ நிறுவனம் நடத்திய சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்பில் திமுகவே அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் சுமார் 1.63 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த கணிப்பில் திமுகவுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. அதன்படி திமுக தலைமையிலான கூட்டணி 159 முதல் 165 தொகுதிகளையும், தேசிய ஜனநாயக கூட்டணி 64 முதல் 70 தொகுதிகளையும், தவெக 4 முதல் 6 தொகுதிகளையும் வெல்லும் என்றும், நாதகவுக்கு ஒரு தொகுதியும் கிடைக்காது என்றும் கணிப்பு தெரிவிக்கிறது.