புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கிடுக முதல்வர் ரங்கசாமி பிரதமரிடம் கோரிக்கை
1 Mar 2026, 5:56 pm
<p><strong>புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கிடுக முதல்வர் ரங்கசாமி பிரதமரிடம் கோரிக்கை</strong></p>
<p>புதுச்சேரி, மார்ச்.1- புதுச்சேரியில் ரூ.2,700 கோடிக்கணக்கான ஒன்றிய, மாநில அரசுகளின் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் விழா லாஸ்பேட்டை விமான நிலையம் எதிரில் ஞாயி றன்று நடைபெற்றது. இவ்விழாவில் புதுச்சேரி உள்துறைஅமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று வர வேற்புரையாற்றினார். விழா வில் சிறப்பு அழைப்பாள ராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசினார். நாடு தழுவிய அளவில் உள்கட்டமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளி க்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. நாட்டின் ஒரு பகுதியாக புதுச்சேரி ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு புதுச்சேரி மிக முக்கியமானது. இப்போது, 2047 ஆம் ஆண்டுக்குள், நாம் ஒரு வளர்ந்த புதுச்சேரியையும் ஒரு வளர்ந்த இந்தியாவை யும் உருவாக்க வேண்டும். இந்த பணியில் புதுச்சேரி யின் இரட்டை இயந்திர அர சாங்கம் உங்களுடன் உள்ளது. சிறந்த புதுச் சேரிக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று பேசினார். மாநில அந்தஸ்து விழாவில் முன்னதாக முதல்வர் ரங்கசாமி பங்கேற்றுப் பேசுகையில்:- புதுச்சேரி மாநிலம் இன்னும் யூனியன் பிரதேச மாக உள்ளது. எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தை வலியுறுத்தி, 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக் கையை முதல்வர் ரங்கசாமி பிரதமரை வலியுறுத்தினார். முன்னதாக விழா மேடை யில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், ஒன்றியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம்,அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜெயக் க்குமார், திருமுருகன், ஜான்குமார், மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் செல்வ கணபதி ஆகியோர் பங்கேற் றனர். பலத்த பாதுகாப்பு பிரதமர் பங்கேற்கும் விழாவையொட்டி புதுச்சேரி முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட் டிருந்தது. ஒன்றிய பாது காப்பு படை வீரர்கள் குவி க்கப்பட்டு, புதுச்சேரி அரசின் காவல்துறையினர் நகரம் முழுவதும் தீவிர பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். தேசிய கீதம் புறக்கணிப்பு அரசு விழா என்பதால் தேசிய கீதம் இசைக்கும் நிகழ்ச்சி மரபாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில்புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் தேசிய கீதம் இசைக்காதது அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.</p>
