தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘மகத்தான கேரளம்’ எனும் பெருமிதமே நமது முன்னேற்றத்தின் உந்துசக்தி சர்வதேச ஆய்வுகள் மாநாட்டில் முதலமைச்சர் பினராயி விஜயன் உரை!

23 Feb 2026, 5:35 pm
‘மகத்தான கேரளம்’ எனும் பெருமிதமே நமது முன்னேற்றத்தின் உந்துசக்தி  சர்வதேச ஆய்வுகள் மாநாட்டில் முதலமைச்சர் பினராயி விஜயன் உரை!

‘மகத்தான கேரளம்’ எனும் பெருமிதமே நமது முன்னேற்றத்தின் உந்துசக்தி  சர்வதேச ஆய்வுகள் மாநாட்டில் முதலமைச்சர் பினராயி விஜயன் உரை!

திருவனந்தபுரம், பிப். 23- “கேரளம் ஒரு சிறிய மாநிலம் என்கிற தாழ்வு  மனப்பான்மையைக் கைவிட்டு, உலகிற்கு வழிகாட்டும் ‘மகத்தான கேரளம்’ என்ற பெருமித உணர்வோடு நாம் முன்னேற வேண்டும்” என்று  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலி யுறுத்தினார். திருவனந்தபுரத்தில் உள்ள ஏகேஜி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 5-ஆவது சர்வதேச கேரள ஆய்வுகள் மாநாட்டைச் சனிக்கிழமை காலை அவர் தொடங்கி வைத்தார். கேரளா வின் எதிர்கால வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்கும் இந்த முக்கிய மாநாட்டில் சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ. விஜயராகவன், சிபிஐ மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் மற்றும் கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே. மாணி உள்ளிட்ட இடது ஜனநாயக முன்னணியின் முக்கியத் தலை வர்கள் பங்கேற்றனர்.  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்களிப்பு  மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர், “கேரளம் இன்று அடைந்துள்ள  முன்னேற்றங்களுக்குச் சமூக மறுமலர்ச்சி இயக்கங்கள் இட்ட அடித்தளமே காரணமாகும். அந்த அடித்தளத்தின் மீது நின்று கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கேரளாவுக்கு ஒரு முற்போக்கான திசையைக் காட்டின. ஒவ்வொரு காலக்கட்டத்தி லும் எதை இணைக்க வேண்டுமோ அதை இணைத்தும், எதை நவீனப்படுத்த வேண்டு மோ அதை நவீனப்படுத்தியும் கம்யூனிஸ்ட் இயக்கம் கேரளாவுக்குப் புதிய உயி ரோட்டத்தை அளித்துள்ளது. நாம் யாருடைய அனுதாபத்திற்காகவும் காத்திருக்க விரும்ப வில்லை; நமது சொந்த பலத்திலேயே முன்னேறத் துடிக்கிறோம்” என்றார். எல்டிஎப் ஆட்சியின்  சாதனைப் பத்தாண்டு கடந்த பத்தாண்டுகால இடது ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், “இந்தக் காலக்கட்டத்தை வெறும் ஆட்சி மாற்றமாக மட்டும் பார்க்கக் கூடாது. இது புதிய கேரளாவை உருவாக்குவதற்கான ‘அதி முக்கியத்துவம் வாய்ந்த’ அடித்தளம் அமைக்கப்பட்ட காலம். குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பத்து ஆண்டுகளில் 1.5  லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது ஒரு வரலாற்றுச் சாதனை. கிப்பி (KIIFB) திட்டங்கள் மூலம் பாரபட்சமின்றி அனைத்துத் தொகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. சில பழைய காலங் களைப் போலத் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு, இன்று அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். எதிர்காலத் தொலைநோக்கு “நமது எதிர்கால கேரளம் நமது பிள்ளை கள் மற்றும் பேரப் பிள்ளைகளின் கனவுகளை நனவாக்கும் இடமாக இருக்க வேண்டும். கேரளம் வெறும் நுகர்வோர் மாநிலமாக மட்டும்  இருந்துவிடக் கூடாது. மாறாக, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கக்கூடிய மனித வளங்களின் மையமாக இது மாற வேண்டும். முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலமாக மாற்ற ஏழு சட்டங்களும் பத்து விதிமுறைகளும் திருத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லத் தெளிவான அரசியல் விருப்பமும் சமூக ஒற்றுமையும் அவசியம்,” என அவர் கேட்டுக்கொண்டார். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், 18 அரங்குகளில் 46 அமர்வு களாகக் கலந்துரையாடல்கள் நடைபெறு கின்றன. சுமார் 3000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், ஒன்றிய அரசின் அரசியல் பாகுபாடுகள் மற்றும் நிதி நெருக்கடிகளைச் சமாளித்து மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.