தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதல்வர் உத்தரவு

28 Nov 2025, 2:28 pm
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதல்வர் உத்தரவு
<p><strong>முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதல்வர் உத்தரவு</strong></p> <p>டிட்வா புயல்</p> <p>சென்னை, நவ.28- &nbsp;வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக நவ.29, 30 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செய லகத்தில் ஆய்வு மேற்கொண்டார். &nbsp;பின்னர் சென்னை எழிலகத்தில் உள்ள &nbsp;மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு &nbsp;வருகை தந்து, 14 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக டிட்வா புயல் காரண மாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறையினரும் முறையான ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் பாது காப்பு மையங்களில் தங்க வைக்கவும் அறி வுறுத்தினார். &nbsp;மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை கள் மேற்கொள்ள கண்காணிப்பு அலுவ லர்களை சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து &nbsp;முகாமிட்டு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். தயார் நிலை நடவடிக்கைகள் முகாம்களில் மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட் கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதியில் வெள்ளநீரை அகற்றிட தேவையான நடவடிக்கையை எடுக்க &nbsp;வேண்டும் என்றும், புயல் காற்றினால் மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டால், அதனை &nbsp;சீர்செய்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் &nbsp;என்றும் முதலமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். &nbsp;பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற் காக, கூடுதலான தேசிய பேரிடர் மீட்பு படையை &nbsp;அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வருமாறும், தேவை ஏற்பட்டால் ராணுவம், கடற் படை, விமானப் படை மற்றும் இந்திய கடலோர &nbsp;காவல் படை ஆகிய மத்திய படைகள் தயார் &nbsp;நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த &nbsp;முதலமைச்சர், நவ.29, 30 ஆம் தேதிகளில் தெற்கு பகுதிகளிலும், டெல்டா பகுதிகளிலும் கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கை &nbsp;விடுக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையும் பாதிக்கப்படும் என்றும், தேவையான இடங்க ளில் முகாம்களும், உணவு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும், மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர் கள் இதை கண்காணித்துக் கொண்டு இருக் கிறார்கள் என்றும், புயலை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத் தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசிய மின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாது காப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மழைக்காலத்தில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட் களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடு களைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.