தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவாரூரில் தேர்தல் பரப்புரையை துவங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

31 Mar 2026, 4:26 pm
திருவாரூரில் தேர்தல் பரப்புரையை  துவங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
<p><strong>திருவாரூரில் தேர்தல் பரப்புரையை &nbsp;துவங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்</strong></p> <p>சென்னை/திருவாரூர், மார்ச் 31- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை &nbsp;முன்னிட்டு, மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் 234 தொகுதி களிலும் போட்டியிடும் வேட்பாளர் களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது முதற்கட்ட தேர்தல் பரப்பு ரையை மார்ச் 31 அன்று மாலை திருவாரூரில் தொடங்கினார். &nbsp;மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சொந்த ஊரான திருவா ரூரில், தெற்கு ரத வீதியில் அமைக்கப் பட்ட பொதுக்கூட்ட மேடையில், திருத் துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய தொகுதி களில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட் பாளர்கள் பூண்டி &nbsp;கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, க.மாரிமுத்து, நெல்லை முகமது முபாரக் ஆகியோருக்கு உதயசூரியன், கதிர் அரிவாள் சின்னங்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு முத லமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். &nbsp; திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர் கே.என்.நேரு, வை.செல்வராஜ் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி, &nbsp;கரூரில் இன்று பரப்புரை திருவாரூர் கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு திருச்சியில் தங்கிய முதலமைச்சர், ஏப்ரல் 1 புதன்கிழமை காலை திருச்சி உழவர் சந்தை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டி யிடும் அமைச்சர் கே.என். நேரு, திரு வெறும்பூர் தொகுதியில் போட்டி யிடும் அமைச்சர் அன்பில் மகேஸ் &nbsp;பொய்யாமொழி மற்றும் 9 தொகுதி களில் கூட்டணி கட்சி வேட்பாளர் களுக்கு ஆதரவு திரட்டுகிறார். மாலை 5 மணிக்கு கரூர் ராயனூ ரில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ண ராயபுரம், குளித்தலை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.