குமரி கடற்கரையில் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>குமரி கடற்கரையில் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்</strong></p>
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி கடற்கரையில் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார். சனிக்கிழமையன்று காலை அருகில் உள்ள கோவளம் கடற்கரையில் நடைபயணம் மேற்கொண்டார். அவருடன் திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான ரெ.மகேஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். அப்போது முதலமைச்சர், பொதுமக்களிடம் நலம் விசாரித்ததோடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.</p>
<p> </p>
