தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரோடு, இராமநாதபுரத்தில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

15 Feb 2026, 3:03 pm
ஈரோடு, இராமநாதபுரத்தில்  உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
<p><strong>ஈரோடு, இராமநாதபுரத்தில் &nbsp;உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!</strong></p> <p>சென்னை, பிப். 15 தமிழகத்தின் தொன்மை மற்றும் &nbsp;வணிகச் சிறப்பினைப் பறைசாற்றும் &nbsp;வகையில், ஈரோடு மற்றும் இராம நாதபுரம் மாவட்டங்களில் அமைய வுள்ள புதிய அருங்காட்சியகங் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நொய்யல் அருங்காட்சியகம் (ஈரோடு): ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லிபாளையத்தில் 33.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் &lsquo;நொய்யல் அருங்காட்சியகம்&rsquo; அமையவுள்ளது. பதிற்றுப்பத்தில் &lsquo;கொடுமணம்&rsquo; என்று &nbsp;புகழப்பட்ட கொடுமணல் அகழாய்வில் &nbsp;கண்டெடுக்கப்பட்ட அரிய தொல் பொருட்களைக் காட்சிப்படுத்த இந்த &nbsp;அருங்காட்சியகம் அமைக்கப்படு கிறது. இங்கு ஏற்கனவே நடந்த அக ழாய்வுகளில் இரும்பு-எஃகு உருக்கா லைகள், தமிழி எழுத்துக்கள் பொறித்த &nbsp;மட்பாண்டங்கள், ரோமப் பேரரசின் நாணயங்கள் மற்றும் செப்பால் ஆன புலிச் சின்னம் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. கொடுமணல் தளம் பண்டைய உலகத்துடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள இது பாலமாக அமையும். நாவாய் அருங்காட்சியகம் (இராமநாதபுரம்): இராமநாதபுரம் மாவட்டம், மண்ட பம் பகுதியில் 34.55 கோடி ரூபாய் &nbsp;மதிப்பீட்டில் &lsquo;நாவாய் அருங்காட்சிய கம்&rsquo; கட்டப்படவுள்ளது. அழகன்குளம் &nbsp;தொல்லியல் தளத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வுகள், ரோம நாட்டிற்கும் &nbsp;தமிழகத்திற்கும் இடையிலான கடல் &nbsp;வழி வணிகத்தை உறுதி செய்துள்ளன. &nbsp;அந்த வரலாற்றுச் சான்றுகளை உள்ள டக்கி, சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த &nbsp;அருங்காட்சியகம் அமையவுள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.