சென்னை அருகே மாமல்லன் புதிய நீர்த்தேக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
19 Jan 2026, 2:23 pm
<p><strong>சென்னை அருகே மாமல்லன் புதிய நீர்த்தேக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்</strong></p>
<p>மாமல்லபுரம், ஜன.19- சென்னை அருகே ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் மாமல்லன் புதிய நீர்த்தேக்கம் அமைப்ப தற்கான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்களன்று (ஜன.19) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 5000 ஏக்கரில் அமைக்கப்படும் இந்த நீர்த்தேக்கமானது நன்னீர் களை சேமித்து வைக்க மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், “நீரும், காற்றும் இருப்பதால் தான் மனிதர்களால் வாழ முடிகிறது. மேலும், அனைத்து உயிரினங்க ளும் தோன்றி வாழ்ந்து வருகின்றன. அதனால் தான் வள்ளுவன் ‘நீரின்றி அமையாது உலகு’ என்று கூறினார். 1967 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் மொத்தம் 43 அணைகள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நம் ஆட்சி காலத்திலும் நீர்வளத்தை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மானாமதி குழும 69 ஏரிகளிலிருந்து பெரும் உபரிநீர் கடலில் கலக்காமல், இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட இருக்கிறது. திரு விடந்தை முதல் கோகிலமேடு வரை 5,161 ஏக்கர் பரப்பளவில் இது அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 1.65 டி.எம்.சி. கொள்ளளவில், 34 கிலோ மீட்டர் நீளமுள்ள கரை மற்றும் நீர் ஒழுங்கியத்துடன் கூடிய புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் வாயிலாக, நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை நம்மால் மக்களுக்கு வழங்க முடியும். சென்னையின் புதிய அடையாளங்களாக மிக வேகமாக உருவெடுத்திருக்கும் பகுதிகளான சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகள் மற்றும் சென்னைக்கு அருகாமையில் வசிக்கும் 13 லட்சம் மக்களுக்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும். இதனால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் திருவிடந்தை, கொகில மேடு, மாமல்லபுரம், திருப்போரூர், தண்டலம், பையனூர் ஆகிய பகுதிகளில் நன்னீரை மடக்கி, கடல் நீர் உப்புத்தன்மையை குறைத்து தடுத்து, நிலத்தடி நீரின் மட்டம் மற்றும் அதன் தரம் மேம்படுத்தப்படும். இந்த பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் 15 கிலோ மீட்டர் நீளம், 311 ஏக்கர் பரப்பளவில் சீரமைக்கப்படவுள்ளதால், உப்பு நீர் நல்லநீராக மாற்றப்படுவதால், மீன் வளர்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி மீனவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்” எனக் கூறினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர் சினேகா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
