ஓசூரில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Feb 2026, 2:37 pm
<p><strong>ஓசூரில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்</strong></p>
<p>கிருஷ்ணகிரி, பிப்.16 - ஓசூரில் 419 படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தேசிய சுகாதார குழு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மாவட்ட தலைமை மருத்துவ மனையாக ஓசூர் அரசு மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2003 ஜனவரியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த கட்டிடம் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. மருத்துவமனைக்காக ஓசூர் இராயக்கோட்டை சாலையில் நாளிகபெட்ட அக்ரஹாரம் கிராமத்தில் 6.02 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 2024 ம் வருடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனை கட்டிட பணிக்காக அடிக்கல் நாட்டினார்.2024ம் ஆண்டு மார்ச் முதல் கட்டிட பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது.தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. ஓசூரில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம் 22,395.45 சதுர மீட்டர் (2,41,064 சதுர அடி) பரப்பளவில் 419 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளுடன் கூடியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டிடம் தரை தளம் முதல் 6 தளம் வரை 20,166.60 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 1327 சதுர மீட்டர் பரப்பில் தரை தளமும் முதல் தளத்தில் சமையல் கூடம், மத்திய கிருமி நீக்க பிரிவு மருந்து கிடங்கு மற்றும் பணியாளர் ஓய்வு அறைகள் ஆகியவைகள் கட்டப்பட்டுள்ளது. காச நோய்,தொழு நோய் பிரிவு, சலவை அரங்கம்,பிணவறை, மருத்துவ கழிவுகள் மற்றும் சிற்றுண்டியகம், ஆகியவை தனித்தனி கட்டிடங்களாக கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டிடத்தை 16.2.2026 காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஓசூர் சட்டமன்ற உறுப்பினர ஒய்.பிரகாஷ், கிருஷ்ண கிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா மருத்துவமனை உள் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் சாராட்சியர் ஆக்ருதி சேத்தி,காவல் கண்காணிப்பாளர் அனில் அக்ஷை வாக்கரே,துணை மேயர் ஆனந்தய்யா, சுகாதார குழு தலை வர் மாதேஸ்வரன், அரசு மருத்து வர்கள்,செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.</p>
