ஸ்டான்லி மருத்துவமனை அருகே 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Jan 2026, 3:58 pm
<p><strong>ஸ்டான்லி மருத்துவமனை அருகே 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்</strong></p>
<p>அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.</p>
<p>சென்னை, ஜன. 21– வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் ரூ.147 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று திறந்து வைத்தார். அத்துடன் வால்டாக்ஸ் சாலையில் ரூ.31 கோடி மதிப்பில் 144 புதிய குடியிருப்புகள் கட்டும் பணியையும் தொடங்கி வைத்த அவர், பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். தலா 415 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 40 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன; மேலும் அங்கன்வாடி, நூலகம், உடற்பயிற்சிக்கூடம், பூங்கா மற்றும் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, நாடாளு மன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பி னர்கள் வெற்றியழகன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், ப.ரங்கநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் காகர்லா உஷா, கோ.பிரகாஷ், ஜெ.குமரகுருபரன், டி.ஜி.வினய், அ.சிவஞானம், ஸ்ரேயா சிங், கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
