இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - து.ராஜா தலைவர்கள் பங்கேற்பு
1 Feb 2026, 3:51 pm
<p><strong>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - து.ராஜா தலைவர்கள் பங்கேற்பு</strong></p>
<p>சென்னை, பிப்.1 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா ஞாயிறன்று (பிப்.1) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீர பாண்டியன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் மூத்ததலைவர் ஜி.பழனிச்சாமி செங்கொடியை ஏற்றினார். தேசிய செயலாளர்கள் ராமகிருஷ்ண பாண்ட், ஆனிராஜா முன்னிலையில் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் இரா.முத்தரசன், வரலாற்று புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி வரவேற்க, மாநில கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் கே.சுப்பராயன் எம்.பி., துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா, திக தலை வர் கி.வீரமணி, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வபெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், மமக தலைவர் எம்.எச்.ஜவா ஹிருல்லா, தவாக தலைவர் தி.வேல்முருகன், கோமதேக இளைஞரணி செயலாளர் சூரிய மூர்த்தி, சிபிஐ(எம்எல்)எல் மாநிலச் செய லாளர் பழ.ஆசைத்தம்பி, மநீம போதும் செய லாளர் அருணாச்சலம், ஆதி தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான் உள்ளிட்டோர் பேசினர். மாநில துணைச் செயலாளர் எம்.ரவி நன்றி கூறினார்</p>
