வேளச்சேரி சாலை – குருஞானக் கல்லூரி இடையே ரூ.310 கோடியில் புதிய மேம்பாலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
5 Feb 2026, 3:40 pm
<p><strong>வேளச்சேரி சாலை – குருஞானக் கல்லூரி இடையே ரூ.310 கோடியில் புதிய மேம்பாலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்</strong></p>
<p>சென்னை, ஜன. 5 – சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை - வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு - 200 அடி சாலை வரை ரூ.310 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு வியாழனன்று (ஜன.5) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வாங்கல் துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அப்போது காணொலி வாயி லாக, 3ஆயிரத்து 511 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 183 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ஆயிரத்து 268 கோடி ரூபாய் மதிப்பீட்டி லான 10 புதிய திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டி னார். இப்பணிகளில் ஒன்றான, பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-172க்குட்பட்ட சர்தார் பட்டேல் சாலை - வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு - 200 அடி சாலை வரை ரூ.310 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்படும். இந்த புதிய மேம்பாலம் 3 கி.மீ. நீளம் (ஐந்து பர்லாங் சாலை மற்றும் வேளச்சேரி பிரதான சாலை அணுகு சாலை உட்பட) மற்றும் 11.9 மீ. அகலத்துடன் இரு வழிப் பாதையாக கட்டப் படவுள்ளது. இந்த பாலம் சர்தார் பட்டேல் சாலை-வேளச் சேரி பிரதான சாலை சந்தி ப்பிற்குப் பிறகு 300 மீ. தொலைவில் தொடங்கி, ரேஸ் கோர்ஸ் சாலை சந்திப்பு, ஐந்து ஃபர்லாங் சாலை சந்திப்பு மற்றும் வேளச்சேரி பைபாஸ் சாலை சந்திப்பு ஆகிய வற்றை கடந்து குருநானக் கல்லூரி அருகே முடிவடை கிறது. மேலும், ஐந்து ஃபர்லாங் சாலையில் 5.5 மீ. அகல மும், குருநானக் கல்லூரிக்கு அருகில் 4 மீ. அகலமும் கொண்ட அணுகு பாலமும் அமைக்கப்படவுள்ளது. பாலத்தின் இருமருங்கிலும் 5.5 மீ. அகலமுள்ள சர்வீஸ் சாலையும், 1.5 மீ. அகலமுள்ள நடைபாதை யும் அமைக்கப்படவுள்ளது. இந்த மேம்பாலப் பணி கள் முடிவுறும் தருவாயில் வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பு (பீனிக்ஸ் வணிக வளாகம் சந்திப்பு) மற்றும் ஐந்து பர்லாங் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த இரண்டு லட்சத் துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள்.</p>
