உலமாக்களின் ஓய்வூதியம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்வு கும்பகோணம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
29 Jan 2026, 3:04 pm
<p><strong>உலமாக்களின் ஓய்வூதியம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்வு கும்பகோணம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!</strong></p>
<p>கும்பகோணம், ஜன. 29 - தமிழ்நாடு உலமாக்கள் வாரி யத்தில் பதிவுபெற்ற உலமாக்களுக் கான ஓய்வூதியம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகளை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளி யிட்டார். தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் புதன்கிழமை மாலை ‘மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு’ மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்ற இந்த 6-ஆவது மாநில மாநாட்டிற்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். முதல்வரின் சிறப்பு அறிவிப்புகள் மாநாட்டில் சிறப்புரையாற்றிய முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், இஸ்லாமிய சமூகத்தின் நலன் கருதி ஐந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, உலமாக்களுக்கான ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும், மறைந்த உலமாக்களின் குடும்பத்தினருக்கான ஓய்வூதியம் 1,500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றார். மேலும், உலமாக்கள் வாரிய உறுப்பினர்களுக்கு இருசக்கர வாக னம் வாங்குவதற்கான மானியத் தொகை 25 ஆயிரம் ரூபாயிலி ருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவ தாகவும், முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு இது வழங்கப்படும் என்றும் அறிவித்தார். சென்னை மற்றும் மதுரையைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் புதிய வக்பு வாரியத் தீர்ப்பாயம் அமைக்கப் படும் என்றும், மாநகராட்சிப் பகுதி களில் கபர்ஸ்தான்கள் (அடக்கத் தலங்கள்) அமைக்க அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், உருது மொழி ஆசிரியர் காலிப் பணி யிடங்கள் நிரப்பப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார். அரசியல் முழக்கம் தொடர்ந்து பேசிய முதல்வர், “இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் பாதுகாப்பு அரணாகத் திகழும். 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கும், மத வாத சக்திகளின் என்டிஏ கூட்ட ணிக்கும் இடையிலான போர். சிஏஏ மற்றும் முத்தலாக் சட்ட விவ காரங்களில் அதிமுக இரட்டை வேடம் போட்டுத் துரோகம் இழைத்தது” எனச் சாடினார். மாநாட்டுத் தீர்மானங்கள் முன்னதாக, இஸ்லாமியர் களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்த வேண்டும், சிறையிலுள்ள இஸ்லாமிய ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 16 முக்கியத் தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கோவி. செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் முக மது அபூபக்கர், நவாஸ்கனி எம்.பி., மற்றும் திமுக, ஐயுஎம்எல் நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சரவணன், கும்பகோணம்</p>
<p> </p>
