12 புதிய ‘தோழி’ விடுதிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்!
13 Nov 2025, 3:30 pm

12 புதிய ‘தோழி’ விடுதிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்!

சென்னை, நவ. 13 - சென்னை தலைமைச் செயலகத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், புதிய கட்டடங் களைத் திறந்து வைத்தார். குறிப்பாக, திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் ரூ. 62.51 கோடி மதிப்பீட்டில் 12 புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் 740 பணிபுரியும் மகளிர் பயன்பெறுவார்கள். தமிழ்நாட்டில் ஏற்கெனவே 15 மாவட்டங்களில் 19 தோழி விடுதி கள் செயல்பட்டு வருகின்றன. இது வரை 1,824 பணிபுரியும் மகளிர் பயனடைந்துள்ளனர். மேலும் 27 புதிய தோழி விடுதிகள் வரும் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. அதேபோல, கோயம்புத்தூர் “பூஞ்சோலை” அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லம் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு ரூ. 27.90 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ. 7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். 70 சிறுவர்கள் தங்கிப் பயன்பெறும் வகையில் இந்த கட்டடம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் மூத்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மகளிருக்கான 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் தொடக்கம்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ. 40 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மகளிருக்கான இந்த ஊர்திகள் தலா ரூ. 1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளி யிட்ட பதிவில், இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கான புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தச் சோகை, இதய நோய்கள் பரிசோத னை செய்யும் மகளிரின் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் தொடங்கும் இந்த திட்டம், மகளிரிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகளுடன், 2026 ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள் ளார். மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் முதலியவற்றை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து பெண்களின் நலனைக் காக்கும் இந்த திட்டத்தை இந்தியா மொத்தமும் பின்பற்றத்தக்க வகையில் செயல்படுத்திக் காட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.