தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு விரிவாக்க திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார்
9 Feb 2026, 3:02 pm
<p><strong>தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு விரிவாக்க திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார்</strong></p>
<p>சென்னை, பிப்.9 - தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்களன்று (பிப். 9) வழங்கினார். மாநில அளவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணி யாளர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த திட்டம் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் என மொத்தம் 1.29 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் பயன் பெறவுள்ளனர். திருவள்ளூர் அருகே போலி வாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணி யாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உணவு வாகனத்தை கொடி யசைத்து முதல்வர் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து உணவு விரிவாக்க திட்டத்தையும் அவர் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, தூய்மைப் பணி யாளர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி களையும் வழங்கினார். தூய்மைப் பணி யாளர்களுக்கு உணவு வழங்கி கலந்து ரையாடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில் ஆட்சியர் மு.பிரதாப், அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, டி.ஜே.கோவிந்தராஜன், சுதர்சனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
